PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை:கடந்த காலத்தில் கனமழை,
அதிகனமழை,புயல், வெள்ளம் ஆகியவற்றால், மக்கள்அனுபவித்த சிரமங்கள்,
துன்பங்கள்ஏராளம். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு,
முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால், பெரும் பாதிப்பில் இருந்து
பாதுகாத்துக்கொள்ள முடியும். பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து
செயல்பட வேண்டும்.
சென்னை வேளச்சேரி பாலத்தில் கார்களை
நிறுத்தியநம்ம மக்களின் ஓவர் முன்னெச்சரிக்கையை பார்த்துட்டு, போன மாசம்
உருவான, 'டானா' புயலே, ஒடிசா பக்கம் ஓடிப் போயிடுச்சோ!
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் பேச்சு: 'கர்ம வீரரும், காமராஜரும்' எனும் புத்தகத்தில் காமராஜரின்தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, தமிழக மக்களிடம் உள்நோக்கத்தோடு கொண்டு செல்லப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின், இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், காங்கிரஸ்கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.
இவரது போராட்டம் எல்லாம், அறிக்கையில் தான் இருக்குது...களத்துல ஒண்ணையும் காணோம்!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி: ஒரே நாடு; ஒரே தேர்தலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்க்கிறார். அதில் இருக்கும் சாதக, பாதகங்களை அரசியல் கட்சித் தலைவராக அவர் யோசிக்க வேண்டும்; எதிர்க்கக் கூடாது.
'பா.ஜ., அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், எதிர்க்கணும்' என்ற திராவிட மாடல் வழியிலேயே விஜயும் பயணிப்பது இவங்களுக்கு தெரியலையா?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'நாட்டின் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து உள்ளன' என, கேரள மாநிலம், வயநாடில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா பிரசாரம் செய்கிறார். பிரியங்காவுக்கு ஓட்டு போட்டால், வயநாடு வலுவிழக்கும். 'இத்தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் ராஜினாமா செய்து, ஓட்டு போட்ட மக்களைஏமாற்றி விட்டார். பிரியங்கா வெற்றி பெற்று என்னபிரயோஜனம்' என, மக்கள் சிந்திக்கின்றனர். காரணம்,மத்தியில் பிரதமர் மோடியின் நல்லாட்சி நடப்பதால், பா.ஜ., வெற்றி பெற்றால், மத்திய அரசின் திட்டங்கள் வயநாடுக்கும் கேட்காமலேயே கிடைக்கும்.
'பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாவிட்டால், வயநாடை கண்டுக்க மாட்டோம்'னு மறைமுகமாமிரட்டுற மாதிரி தெரியுதே!

