PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

தமிழக சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேட்டி: த.வெ.க.,
மாநாட்டில் விஜய்சினிமா வசனம் பேசி உள்ளார். புதுசாஏதாவது அறிவிப்பார்;
மாற்றம் உருவாக்குவார்என எதிர்பார்த்த நிலையில், தி.மு.க., கொள்கையை தான்
சொல்லி இருக்கிறார். இவரை போல் எவ்வளவு பேரை பார்த்திருப்போம். புதுசு
புதுசா வருவர்; காலப்போக்கில் மறைந்து விடுவர். தி.மு.க., மிகப்பெரிய ஆல
மரம். இதை யாரும் அசைத்து பார்க்க முடியாது. நீடித்து நிலைக்கக்கூடியது.
இவங்களும் ஆல மரம், அரச மரம்னு அரைச்ச மாவையே தான் அரைக்கிறாங்க... புதுசா எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: விஜய் படங்கள் போலவே, அவருடைய கட்சி மாநாடு தொடக்கமும் நன்றாக உள்ளது. விஜய்க்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி வாழ்த்து சொன்னதைவைத்து கூட்டணி என, முடிச்சு போட வேண்டாம். த.வெ.க., கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டால், எதற்கு அ.தி.மு.க.,வில் இருக்கவேண்டும்; நாங்களும் அவர் கட்சியில் சேர்ந்து விடலாமே.
மனசுல இருக்கிறது தான் வார்த்தையா வெளிப்படும்... விஜய் கட்சிக்கு போறது பத்தி எதிர்கால திட்டம் ஏதும் இருக்குமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: உதயநிதி,விஜய் எனும் ரீல் ஹீரோக்களோடும், அண்ணாமலை எனும் ரியல் ஹீரோவோடும், எதிர்கால தமிழக அரசியல் நகரும் என உணரப்படுகிறது. வருங்கால தமிழகத்தின்அரசியல் களம், துடிப்புள்ள இளைஞர்களின் விவேக திடலாக திகழப் போகிறது. அந்த களத்தில் பழனிசாமி போன்ற பதர்கள் என்னவாகும்என்பது தான், யூகிக்க முடியாத கேள்வி.
அந்த பதர்கள் வரிசையில், இவங்க தலைவர் பன்னீர்செல்வமும் உண்டு தானே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'பவுன்சர்'கள் கலாசாரத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். பவுன்சர்கள் இருந்தால் தான் வெளியில் வர முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள், வெளியில் வரவே வேண்டாம்.
பவுன்சர்களோடு வலம் வரும் விஜயை தான் கண்டிக்கிறார்னு நல்லாவே தெரியுது... விட்டால், 'கிரிக்கெட்டில் கூட பவுலர்கள் யாரும் பவுன்சர்கள் போடக்கூடாது'ன்னு சொல்வார் போலிருக்கே!

