PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

இவர் சொல்றதெல்லாம்,'இண்டியா' கூட்டணிக்கு தலைமைவகிக்கும் காங்கிரசுக்கு
தான், 10 வருஷமா நடக்குது!தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:
தமிழகம்
முழுதும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள அமைச்சர்களையும், அதிகாரிகளையும்
முதல்வரும், துணை முதல்வரும் அனுப்பினர். வாய் திறந்தாலே பொய் பேசும்
பழனிசாமி, தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதை மறந்து விடக்கூடாது.
அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதாவிடம் கையெழுத்து பெற அதிகாரிகள்
தவமிருந்தபோது, செம்பரம்பாக்கம் ஏரியை ஒரே இரவில் திறந்து, வெளியில்
சொல்லாத அளவிற்கு பலர் இறந்தனர்.
பழனிசாமியும், தங்களது கூட்டணி கட்சி தலைவர்கள்மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கிறாரோ?
அனைத்து மக்கள் அரசியல்கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மழை நீர்வடிகால் திட்டத்திற்கு, 4,000கோடி ரூபாய் ஒதுக்கி என்னபயன்? கடந்த ஆண்டு நவம்பரில், 80 சதவீத பணிகள்முடிவுற்றதாக கூறப்பட்டது.ஆனால், தற்போது வரை மழை நீர் வடிவதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல்,மக்களை எச்சரிப்பதில் மட்டுமே, அரசு கவனம் செலுத்தி வருவது, மிகவும்மோசமான ஆட்சி முறையை வெளிப்படுத்துகிறது.
'ரெட் அலெர்ட்' பிசுபிசுத்து போனதுக்கே இந்த நிலை என்றால்,மழை வெளுத்து வாங்கியிருந்தா என்ன ஆகியிருக்கும்?
தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் பேட்டி: துணை முதல்வர் உதயநிதிதலைமையில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், மேயர், கமிஷனர் பங்கேற்ற ஆய்வுகூட்டத்தில், 'நீர் மேலாண்மைதுறைக்கு, 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, 33 கால்வாய்களில்துார்வாரும் பணிகள் நடக்கவில்லை' என, அமைச்சர் துரைமுருகன் புகார்தெரிவித்தார். இதனால், அவரை தவிர்த்து விட்டு, 15 நாட்களுக்கு பின் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
துரைமுருகன் இப்படி எல்லாம்பேசினால், அவர் ஆசைப்பட்டு ஏற்கனவே பேசியது போல்,இன்பநிதியின் அமைச்சரவையில்கூட இடம் கிடைப்பது சிரமம் தான்!
மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் பேச்சு: 'இண்டியா' கூட்டணி மக்களை ஒன்றுபடுத்தும் கூட்டணியாக திகழ்கிறது. லோக்சபாதேர்தலில், பா.ஜ.,வுக்கு, 'அடி'விழுந்ததால், குறைந்த எம்.பி.,க்களோடு மத்திய அரசு தடுமாறுகிறது. வரும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 'இடி' விழுந்தால்பா.ஜ., எதிர்க்கட்சியாக மாறும்.அப்போது, பா.ஜ., மீது மக்களுக்கு கொஞ்சமாவதுஅனுதாபம் உருவாக வேண்டுமானால், இனியாவதுவெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்.

