PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், மழைநீரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கும் இடமாக, தே.மு.தி.க., அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்; தங்குவோருக்கு தேவையான உணவு, அங்கு ஏற்பாடு செய்யப்படும். கட்சி நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.விஜயகாந்த் இருந்திருந்தால் இதைத்தான்செய்திருப்பார்... அவர் போலவே, இயற்கை பேரிடரில் மக்களுக்கு உதவ நினைக்கும் இவங்களை மனசார பாராட்டலாம்!
புதுச்சேரி முன்னாள் கவர்னர்தமிழிசை பேட்டி: ஆன்மிகத்தை விடுத்து அரசியல்கிடையாது. ஆரோக்கியமான ஆன்மிகம் இருக்கவேண்டுமென பா.ஜ., வலியுறுத்துகிறது. தமிழகத்தில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசுவது, ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது, ஹிந்து மக்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்வதுஎன, ஒரு சாராரின் அரசியல்,வெகுநாட்களாக நடக்கிறது;இனிமேல் இத்தகைய அரசியல் இருக்கக் கூடாது.
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால்தான், இவங்க எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: பண்டிகை காலம் மற்றும்மழை வெள்ள சூழலை பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில்,பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப் பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக இருக்கிறது. பண்டிகைகாலத்தில் மக்கள்அதிகம் வாங்கும் உணவுப்பொருட்கள் மற்றும் உடைகள், விலையேற்றம்அடைந்துள்ளன. 'கிடுகிடு'வென உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த,மத்திய, மாநில அரசுகள்உடனே தலையிட வேண்டும்.
விலைவாசி ஏறும் முன்பே, அதைக் கட்டுப்படுத்தணும்... தாறுமாறா ஏறியதுக்கு அப்புறம் எடுப்பது எல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைதான்!
தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: ஏழை குடும்பத்தினர் துயர் நீக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்., 30, 31 ஆகிய தேதிகளில், 'டாஸ்மாக்' கடைகளுக்கு முதல்வர் விடுமுறை அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனம் மதுபானவிற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்ததை, அமைச்சர் செந்தில் பாலாஜி திரும்பப் பெற வேண்டும்.
சரியா போச்சு... இவரதுகோரிக்கையை அரசு ஏத்துக்குதோ, இல்லையோ, 'குடி'மகன்கள் ஒருபோதும் ஒத்துக்கவே மாட்டாங்க!

