sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை, தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை; மாநில அரசின் அஜாக்கிரதையால் உயிரிழப்புகள் நடந்துள்ளன. அலட்சியத்துடன் அரசு செயல்பட்டுள்ளது, வெளிப்படையாக தெரிகிறது. உயிர்இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

நிவாரண பணத்தை, தவறு செய்த அதிகாரிகளின்சம்பளத்தில் இருந்து பிடித்து வழங்கினால், இனி இதுபோன்ற அலட்சியங்கள் நடக்காது!

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: துணை முதல்வர் உதயநிதியின் டி - ஷர்ட்டில் தி.மு.க., சின்னம், கொடி இடம்பெற்றுள்ளது. கட்சி நிகழ்ச்சிக்கு அதை அணிந்து சென்றால், அது அவரது தனிப்பட்ட விஷயம். பொறுப்பான அரசு உயர் பதவியில் உள்ளவர், கட்சியின் சின்னம் போட்டுள்ள டி - ஷர்ட் அணிந்து, அரசு நிகழ்ச்சிக்கு செல்லலாமா?

போக கூடாது தான்... ஆனாலும், திராவிட மாடல் ஆட்சியின் இளவரசரை தட்டி கேட்கவோ, சுட்டிக்காட்டி திருத்தவோ யாருக்கு இங்க துணிச்சல் இருக்குது?

தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: மெரினா வான் சாகச நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை, தனியார் நிறுவனத்திடம், தமிழக அரசு ஒப்படைத்து, உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், என்ன தண்டனை அவர்களுக்கு கொடுக்கப்படுமோ, அதே தண்டனையை இந்நிகழ்ச்சியை சரியாக கையாளாத தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து,தண்டனை வழங்கட்டும்.

தண்டனை தரணும்னு பார்த்தா, நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் சிக்குவாங்களே... அப்புறம், அரசை யார்நடத்துறதாம்?



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வி துறை சார்ந்த அலுவலகபணியாளர்களுக்கும் சம்பளம்வழங்குவதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள், தமிழக அரசு நிதி நிர்வாகத்தில், ஒரு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுஇருப்பதாக தெரிகிறது. அவசியமற்ற செலவுகளை நெறிப்படுத்தி, இவ்விவகாரத்தை மாநில அரசு நேர் செய்ய வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசுக்கு துணை நின்று, அரசியல் நோக்கம் தவிர்த்து உதவ வேண்டும்.

டில்லி போயிருக்கிற இவரது தலைவர் பன்னீர்செல்வம், மத்திய அரசிடம் இதை வலியுறுத்தியிருக்கலாமே!






      Dinamalar
      Follow us