sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: வி.சி., மது ஒழிப்பு மாநாட்டில், அக்கட்சி தொண்டர்கள் மது அருந்திவிட்டு, அடங்க மறுத்து, அத்துமீறி நடந்து கொண்ட காட்சிகள், ஊடகங்களில் வலம் வருகின்றன. அவர்களின் அத்துமீறல்களை அடக்க முடியாமல், காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் திண்டாடியது, கொடுமையிலும் கொடுமை.

மாநாடு நடந்த அக்., 2ல் மது கடைகளுக்கு விடுமுறை... 'பிளாக்'ல வாங்கியே இவ்வளவு,'அலப்பறை' என்றால், கடைகள் திறந்திருந்தால், என்ன கதி ஆகியிருக்கும்?

தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்அறிக்கை: சென்னை மெட்ரோதிட்டத்திற்கு, பிரதமரிடம், 50 சதவீதம் நிதியை கேட்டு பெற்ற முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின், 13,500 கோடிரூபாயிலான விஸ்வகர்மா திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்தி,கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். தாமதித்தால் உண்ணாவிரத போராட்டத்தைபா.ஜ., முன்னெடுக்கும்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு மசிவாங்களா... பேசாம சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி பார்க்கலாமே!

பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: தமிழக அரசு பள்ளிகளுக்கு, 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு, 80 நாட்களாகின்றன. ஆனால், பணி நியமன ஆணைகளை வழங்காமல், பள்ளிக்கல்வி துறை தாமதப்படுத்தி வருகிறது.ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நியமன பணிகளை, அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாது.

கிட்டத்தட்ட மூணு மாசமா, 'லேட்' பண்றதை பார்த்தால், 'டீலிங்' ஏதும் நடக்குமோ என்ற கேள்வி தான் எழுது!

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணஅறிக்கை: தமிழகத்தில், 1.15 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும், சிறு, குறுதொழில்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கும் நிலையில்,சிறு, குறு தொழில்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

மத்திய அரசு மீது மாநிலஅரசு வைக்கிற அதே குற்றச்சாட்டுகளையே, இவங்களும் வைக்கிறாங்களே!






      Dinamalar
      Follow us