PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழனி, திருச்செந்துார், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோவில் போன்ற கோவில்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஹிந்து அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம்
தயாரிப்பதற்கான மூலப்பொருளின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும்.
கோவில் பிரசாதத்தை புனிதமாக கருதிய
பக்தர்களை, இனி, 'இதுல என்ன கலப்படமோ?' என, நினைக்கிற நிலையை ஏற்படுத்திட்டாங்களே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: அரசு பஸ்கள், 15 ஆண்டுகள்
பயன்படுத்தியபின், மேலும் ஓராண்டுக்குஇயக்க அனுமதிக்கக்
கூடாது.சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மக்களின் உயிர்களுக்கும், சாலையில்
பயணிப்பவர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். மக்களின் உயிரோடு
விளையாடக் கூடாது. எனவே, 15 ஆண்டுகள் கடந்த அரசு பஸ்கள், பிற வாகனங்களைஉடனே
பயன்பாட்டில்இருந்து நீக்க வேண்டும்; அவற்றுக்கு பதிலாக புதிய பஸ்களை
வாங்கி தமிழக அரசு இயக்க வேண்டும்.
பஸ் வாங்க காசில்லாம தானே காயலாங்கடைக்கு போட வேண்டிய பஸ்களை, இன்னும் ஒரு வருஷம் ஓட்ட அனுமதி கொடுத்திருக்காங்க!
அ.தி.மு.க., முன்னாள்அமைச்சர் செம்மலை அறிக்கை:சென்னை, மறைமலை நகரில்புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து, போராட்டம் நடத்திய வி.சி., கட்சியினரை தடுத்த ஆட்சி, கட்சியை, மது ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு மாநாட்டு மேடையில் ஏற்றுவது என்ன லாஜிக் என்பதை திருமாவளவன் சொல்ல வேண்டும்.
அவர் அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்ததும், 'தி.மு.க.,வைஅழைக்காவிட்டால் நாங்கள்பங்கேற்போம்'னு நீங்க சொல்லியிருந்தா அவங்களை அழைத்திருக்க மாட்டாரோ, என்னமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கடந்த 2016 வரை, தொண்டர்கள் துவங்கி தலைவர்கள் வரை, தன் இயக்க பற்றோடும், எதிர் இயக்கத்தோடு கடுகளவும்தொடர்பு இல்லாத பகை உணர்வோடும் களமாடி வந்த தமிழக அரசியல், தற்போது சுய கட்சி பற்று குறைந்து, எதிராளி என்ற வெறுப்பு அரசியலும் தளர்ந்து, ஒரு புது வகையிலான ஒப்பந்த அரசியல் தழைத்தோங்கி வருகிறது.
என்னமோ இந்த ஒப்பந்தம் இப்ப தான் உருவான மாதிரி சொல்றாரே...? காலங்காலமா இருப்பது தானே!

