PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு:
தமிழகத்தில்
தேவையை விட அதிகமாக, அனைத்து மாவட்டங்களிலும் உரம் இருப்பு
வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரம் விற்கும்போது, இணை இடுபொருட்களை
வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தும் உர
விற்பனையாளர்கள்,இடுபொருள் விற்பனையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும்.
ரேஷன் கடைகள்ல சோப்பு, ஊட்டி டீ துாளை மக்கள்தலையில்
கட்டுற மாதிரி, இடுபொருட்களை விவசாயிகளிடம், 'தள்ளிவிடுவதும்'
தொடர்ந்துட்டு தான் இருக்குது!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: 'பாலியல் குற்றச்சாட்டு, 24 மணி நேரத்தில்உறுதி செய்யப்பட்டால், அதற்கு விசாரணை கூடாது; துாக்கு தண்டனைவிதிக்க வேண்டும்' என்ற சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தினால் தான், எதிர்காலத்தில் பாலியல் குற்றங்கள் நடக்காது.
பரவாயில்லையே... பா.ஜ., அணியில் இருந்தாலும், எதிரணியான, 'இண்டியா' கூட்டணியின் மம்தா பானர்ஜி போட்ட சட்டத்துக்கு சாதகமா பேசுறாரே!
அனைத்து மக்கள் அரசியல்கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: நடிகர் - நடிகையர் அல்லதுபிரபலங்கள் விவாகரத்துசெய்தால், அதை பெரிய செய்தியாக மாற்றாதீர்கள்;அது, அவர்களின் சொந்த வாழ்க்கை. அவர்களும் மனிதர்கள்தான். எந்த ஜோடி பிரிந்தாலும், பெண்ணின் நடத்தை குறித்து தவறாகப் பேசுவதை, இந்த சமூகம் வாடிக்கையாக வைத்திருப்பதுவேதனைக்குரியது. பிறர் மனதை துன்பப்படுத்தி, அதில் இன்பம் காணும் மனோபாவம், இன்று சமூக வலைதளங்களில் அதிகமாகி உள்ளது.
சமூக வலைதளங்களால் நல்லது நடக்குதோ, இல்லையோ... நிறைய, 'சைபர் சைக்கோ'க்கள் உருவாகிட்டே போறாங்கஎன்பது மட்டும் உறுதி!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: தமிழகத்தில்ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் போதைப் பொருட்கள்தான். கல்லீரல்பிரச்னை, விபத்துகள், தற்கொலைகள், மனநலம்கெடுவதும் மதுவால் தான். மதுவால் அரசுக்கு வருவாய், 56,000 கோடி ரூபாய்; ஆனால், இழப்பு, 2 லட்சம் கோடி. தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் திராவிட மாடல்.
வாஸ்தவம்தான்... திராவிடமாடல் ஆட்சியில் நிறைய படிப்பாளிகள் உருவாகி இருக்காங்களோ இல்லையோ...குடிநோயாளிகள் கூடியிருக்காங்க என்பது உண்மை!

