PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
கவர்னர்
தேநீர் விருந்தில் தி.மு.க., பங்கேற்பு; கருணாநிதி நினைவு நாணய வெளியீடு
நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவர் புகழாரம் குறித்து, பல கற்பனை கதைகள்
புனையப்பட்டு வருகின்றன. 'எங்களால் தான் தமிழகம் தொடர் வெற்றி பெறுகிறது;
அடுத்து கூட்டணி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் யோசிக்க வேண்டும்' என
வாதம் செய்வோருக்கு பதிலடியாக, கதர் சட்டைகளின் பங்களிப்பு இல்லாத
நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
இனிமே, 'ஆட்சியில் பங்கு பெறணும்'னுகாங்கிரசார் கனவுல கூட யோசிக்க மாட்டாங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: காவிரிஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பித்து உள்ளது; இது கண்டனத்திற்குரியது. 'மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம்; இதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவைஇல்லை' என, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இதெல்லாம், கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு சித்தராமையா வைக்கும், 'செக்' தான்... இதுபோன்ற சித்து வேலைகள் அவருக்கு ரொம்பவே அத்துப்படி!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'பழனி முருகன் கோவில் மலையில், முஸ்லிம்கள்வழிபாடு செய்கின்றனர்' என, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் பேசி உள்ளார். இதற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். அவர் பேச்சுக்கு, கோவில் நிர்வாகம்புகார் தெரிவிக்க வேண்டும். 'முருகன் புகழ் பாடுகிறோம்' என்ற பெயரில், முஸ்லிம்களுக்கு துதி பாடிய எம்.பி., பேச்சு ஏற்கத்தக்கதல்ல.
இந்த மாதிரி ஏதாச்சும்குட்டி கலாட்டா பண்றது, தோழர்களுக்கு எப்பவும் வழக்கம் தானே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: தேர்தலில் முதலீடு செய்த பணத்தை அறுவடை செய்ய அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர். தேனி தொகுதியில்போட்டியிட்ட நான்,'ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது' என, முடிவெடுத்துசெயல்பட்டேன். என் முடிவால் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் சோர்வடைந்தனர். அப்படியிருந்தும் எனக்கு, 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன; ஓட்டளித்த மக்களுக்காக உழைப்பேன்.
அப்ப, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது யாருங்கோ?

