PUBLISHED ON : ஆக 28, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: சென்னையில் புத்தக
வெளியீட்டு விழாவில் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார் ரஜினி என்பது செய்தி.
ஆனால் அது வஞ்சப்புகழ்ச்சி. 'குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொண்டீர்கள்.
உங்கள் தந்தைக்கு பின் குடும்ப ஆட்சியை காப்பாற்றுவது கடினம்.அதை தக்க
வைத்ததற்கு பாராட்டுகள். தமிழகத்தில் எந்த துறையிலும் சாதனை இல்லை. பழம்
தின்று கொட்டை போட்ட, தி.மு.க., அமைச்சர்களை கைகட்டி வாய் பொத்தி, அமைதியாக
அடக்கமாக புரட்சி செய்யாமல் இருக்க வைத்தது தான் சாதனை' என்று தான் ரஜினி
புகழ்ந்துள்ளார்.
திருக்குறளுக்கு பலரும் விளக்கவுரை எழுதியிருப்பது மாதிரி, ரஜினி பேச்சுக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கிறாங்களே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: உத்தரபிரதேசத்தில், 'அரசுஊழியர்கள் ஆக., 31ம்தேதிக்குள் தங்கள் அசையும்மற்றும் அசையா சொத்து களின் பட்டியலை அறிவிக்காவிட்டால், அடுத்த மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாது. பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும்' என, அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்திலும் இந்தஉத்தரவை செயல்படுத்தலாமே.
ஏற்கனவே, அரசு மீது கடுப்பில் இருக்கிற அரசு ஊழியர்களை இன்னும் வெறுப்பேற்ற ஐடியா தர்றாரோ?
தமிழக பா.ஜ., விவசாயஅணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் அவரது அரசியல் வருகை, சிறுபான்மையினர் ஓட்டுகளை ஈர்க்கும். இதனால், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு கிடைக்கும் சிறுபான்மையினர் ஓட்டுகள் பாதிக்கும். ஒட்டுமொத்தமாக திராவிட மாடலுக்கு பெருத்த பாதிப்பை கொடுக்கும்.
'எப்படி இருந்தாலும், சிறுபான்மையினர் எங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க'ன்னுஒப்புக் கொள்கிறாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'ஆளும் கட்சியினர் மீதான அரசியல் ரீதியான வழக்குகள், ஒரு மாதத்திற்குள் வாபஸ் பெறப்படும்' என, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அமைச்சர் அரசியல் ரீதியான வழக்குகள் என்று எப்படி இனம் பிரித்து பார்ப்பார். இதிலிருந்து தமிழகத்தில் நடப்பது சட்டப்படியான ஆட்சியா அல்லது அவர்கள் இஷ்டப்படியான ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது.
அவங்க இஷ்டப்படிநடக்கிற சட்டப்படி ஆட்சின்னு தான் எடுத்துக்கணும்!

