PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி எனக் கூறுவது, நடிகர் விஜயின் ஆசை. இதுபோல தேர்தல் வரும்போது பல தலைவர்கள் வருவர்; அதன்பின் காணாமல் போய் விடுவர். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்கினார். அதன்பின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக்கினார்.
'கட்சியில் தொண்டராக இருந்த பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலராக மாறியுள்ளார். அவர் கட்சியை தற்போது வழி நடத்துகிறார். 53 ஆண்டுகளாக தொண்டர்கள் கையில் உள்ள கட்சி, மக்கள் விரும்பும் வகையில் செயல்படுகிறது...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'மக்கள் விரும்புற மாதிரி அ.தி.மு.க., இருந்தால், தேர்தல்கள்ல ஏன் தொடர் தோல்விகள் கிடைக்குதாம்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.