PUBLISHED ON : நவ 28, 2025 12:00 AM

மதுரை மாவட்டத்தில், ஆவினுக்கு பால் உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுடன் கலந்துரையாட, அத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கிராமங்களுக்கு, 'விசிட்' செய்தார்.
குலசேகரன்கோட்டை கிராமத்திற்கு சென்றவர், மூதாட்டி ஒருவரை பார்த்தார். தலை முழுதும் நரைத்த முடி, 'பாப்' கட்டிங் என இருந்த அந்த மூதாட்டியை பார்த்த அமைச்சர், 'உங்க முடி ரொம்ப ஸ்டைலா இருக்கே' என, பாராட்டினார்.
அவருடன் வந்த பலரும், அந்த மூதாட்டி என்ன பதில் சொல்லப் போகிறார் என எதிர்நோக்க, 'எனக்கு காது கேட்காதுங்க' என சைகையில் அவர் கூற, இந்த, 'டுவிஸ்ட்'டை எதிர்பார்க்காத மனோ தங்கராஜ், அசட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார்.
உடன் சென்ற உள்ளூர் தி.மு.க., தொண்டர் ஒருவர், 'பால் உற்பத்தி செய்ததை பாராட்டுவார் என்று பார்த்தால், பாட்டி முடியை பாராட்டுறாரே... இது எங்க போய் முடியுமோ...?' என சிலேடையாக புலம்ப, உடன் வந்த தி.மு.க.,வினர் சிரித்தபடியே நடந்தனர்.

