PUBLISHED ON : ஏப் 01, 2026 03:02 AM

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சி நடத்திய விதம் திருப்திகரமாக இல்லை; மக்களை ஏமாற்றி விட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில் எந்த நெருடலும், உரசலும் இல்லை. ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகளை, தி.மு.க., அடிமைகளாக நடத்துகிறது.
'த.வெ.க., தலைவர் விஜய்க்கு, தி.மு.க., கடுமையாக பயப்படுகிறது. விஜய் கட்சி துவங்கியது முதல், நாங்கள் எதுவும் விமர்சனம் செய்யவில்லை. யாரும் கட்சி துவங்கலாம் என்ற நிலையில் தான், விஜய் கட்சியை பார்க்கிறோம். ஆனால், த.வெ.க., துவங்கப்பட்டதில் இருந்து, தி.மு.க., மட்டும் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறது. த.வெ.க.,வை ஒரு அச்சுறுத்தலாக, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'எதிர்காலத்தில், உதயநிதிக்கு போட்டியாக, விஜய் வந்துடுவாரோன்னு பயப்படுறாங்க போலும்...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.
