தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அரசியல்ல இது சகஜம் தானே!'

 'அரசியல்ல இது சகஜம் தானே!'

 'அரசியல்ல இது சகஜம் தானே!'

1


PUBLISHED ON : மே 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்க தேவையான 118 என்ற இலக்கை பெறுவதற்காக, தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்றிருக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.

அந்த வரிசையில், 'மா.கம்யூ., கட்சியிடம் விஜய் ஆதரவு கேட்டால் ஆலோசித்து முடிவெடுப்போம்' என, அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம், பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சென்னை, திருவொற்றியூரில் டீக்கடையில் அமர்ந்திருந்த தி.மு.க., தொண்டர் ஒருவர், சண்முகம் பேட்டியை தன் மொபைல் போனில் பார்த்துவிட்டு, 'ஏற்கனவே நம்ம தயவில் ஜெயித்த காங்கிரஸ்காரங்க முதுகுல குத்திட்டு ஓடிட்டாங்க... அடுத்து, ரெண்டு எம்.எல்.ஏ.,க்களை வச்சிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூ.,காரங்களும் ஓடிடுவாங்களோ...' என புலம்ப, சக தொண்டர், 'அட விடுப்பா... அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே...' என, ஆறுதல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us