PUBLISHED ON : டிச 11, 2025 03:44 AM

சென்னை, கொரட்டூரில் சமீபத்தில் நடந்த தன் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கலந்து கொண்டார்.
விழாவில், வைகோ பேசுகையில், 'கல்லுாரி, வேலைக்கு செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை, வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருப்பதாக என்னை பார்க்கும் பெற்றோர் கூறுகின்றனர். பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு, போதை பொருட்கள் தான் காரணம். அவற்றை, கடுமையான சட்டங்கள் வாயிலாக, இரும்புக்கரத்தால் அரசு ஒடுக்க வேண்டும்...' என்றார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட ஒருவர், 'ஆளும், தி.மு.க., கூட்டணியில் இருந்துட்டே, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லைன்னு துணிச்சலா பேசுறாரே...' என்றார்.
அருகில் இருந்தவர், 'இப்படி எல்லாம் பேசினா, கூட்டணியில் இருந்து இவருக்கு, 'கல்தா' குடுத்துட போறாங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

