PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவில், இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி தலைவர் டாக்டர் பாலசங்கர் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'பூக்கடைக்கு விளம்பரம் தேவையான்னு கேட்பாங்க... இப்பல்லாம் டாஸ்மாக் கடைக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனா, பூக்கடைக்கு விளம்பரம் கட்டாயம் தேவை. அது மாதிரி தாய்ப்பால் கொடுக்கச் சொல்லி, விளம்பரப்படுத்துறதும் கட்டாய தேவையாகி விட்டது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வெறும் 40 சதவீதம் தான்.
'மீதியுள்ளவர்களுக்கு, இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினா தான் உண்டு. குழந்தை பெற்ற பெண்களை பாலுாட்ட வைப்பது, அதுவும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பாலுாட்ட வைப்பது பெரிய சவால்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு போயிடும்னு நினைக்கிற பெண்கள் அதிகமாகிட்டதால, விழிப்புணர்வு அவசியம் தான்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

