/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'சிந்திக்க வச்சு சிரிக்க வைக்கிறாரே!'
/
'சிந்திக்க வச்சு சிரிக்க வைக்கிறாரே!'
PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM

'திருப்பூர் நகைச்சுவை முற்றம்' சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில், 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற தலைப்பில், பேராசிரியர் ராமச்சந்திரன் பேசினார்.
தன் பேச்சின் துவக்கத்திலேயே, 'அருளோடும், அன்போடும் வாரா பொருளாக்கம்...' என்ற திருக்குறளை கூறி, அதற்கு விளக்கமும் கொடுத்தார். அதன்பின், ஒவ்வொரு, 10 நிமிட இடைவேளையிலும், தான் கூறிய திருக்குறளை, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் கூற வேண்டும் என கேட்ட அவர், 'சிரிப்பாக சிரித்தாலும், இதன் மூலம் 10 பேராவது திருக்குறளை நினைவுபடுத்தி, பயன் பெற வேண்டும் என்பது தான் என் நோக்கம்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'உருவ கேலி, இரட்டை அர்த்த வசனம், குத்தல் பேச்சுக்களை, காமெடி என்ற பெயரில் பேசி பார்வையாளர்களை படுத்தி எடுக்காமல், சிந்திக்க வைக்கும் வகையில் பேசி சிரிக்க வைக்கும் இவரை பாராட்டலாம்...' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

