/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'5 லட்சம் வழங்க 10 லட்சம் செலவு!'
/
'5 லட்சம் வழங்க 10 லட்சம் செலவு!'
PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் நடந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த, திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன் தலைமை வகிக்க, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முரளி, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, மனுக்களும் பெறப்பட்டன. மேலும் கூட்டுறவு, தொழிலாளர் நலன், சமூக நலத்துறை வாயிலாக, 23 பயனா ளிகளுக்கு 5.20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், 'பிரமாண்டமா விழா நடத்தியிருக்காங்க. பந்தல், விழா மேடை, அலங்காரம், பேனர் விளம்பரம்னு அசத்தியிருக்காங்களே...' என்றார்.
அருகில் இருந்த மற்றொருவர், 'அஞ்சு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குறதுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவு பண்ணிருப்பாங்க போலிருக்கு...' எனக் கூற, அனைவரும் சிரித்தபடியே கலைந்தனர்.

