PUBLISHED ON : ஜன 01, 2026 01:59 AM

காஞ்சிபுரம் மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம், மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமையில், உத்திரமேரூர் தனியார் மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது.
இதில் ராஜேந்திரன் பேசுகையில், 'இக்கூட்டத்திற்கு வந்துள்ள, தே.மு.தி.க., நிர்வாகிகள் பலர், கட்சி கரை வேட்டி அணியாமல், சாதாரண வேட்டி மற்றும் பேன்ட் அணிந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. கரை வேட்டி கட்டாமல் கூட்டத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
'இந்த தொகையை, கூட்டம் முடிந்ததும், அனைவரும் கண்டிப்பாக கட்ட வேண்டும். இந்த பணம், வரும் ஜன., 9ல் நடக்கும் கட்சி மாநாட்டு செலவுக்கு பயன்படுத்தப்படும்...' என்றார்.
இதை கேட்டு, அதிர்ச்சியடைந்த நிர்வாகி ஒருவர், 'இப்படி எல்லாம் அபராதம் போட்டா, மிச்சம் மீதி இருக்கிற நம்ம கட்சியினரும், வேற கட்சிகளுக்கு ஓட்டம் பிடிச்சிடு வாங்க...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.

