/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'அவரையே எதிர்க்க துணிஞ்சிடுச்சே!'
/
'அவரையே எதிர்க்க துணிஞ்சிடுச்சே!'
PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

அன்புமணி அணியில் உள்ள பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலர் என்று கூறியவர்கள் எல்லாம் இன்றைய தினம் காணாமல் போய் விட்டனர். பா.ம.க., என்பது ஒன்று தான். ஆனால், சட்ட ரீதியாக ஒரு அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அன்புமணி தெளிவாக செய்து கொண்டிருக்கிறார்.
'ராமதாஸ் வேறு அணி, அன்புமணி வேறு அணி என்பதெல்லாம் எங்களுக்கு இல்லை. ராமதாஸ் துணிச்சலாக எதையும் விமர்சனம் செய்யலாம் என சொல்லிக் கொடுத்ததன் அடிப்படையில் தான், எங்கள் விமர்சனங்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ராமதாஸ் கற்று தந்த துணிச்சல், இன்று அவரையே எதிர்க்கும் அளவுக்கு போயிடுச்சே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.