PUBLISHED ON : மார் 15, 2026 02:14 AM

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்துாரில் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழாவில், நடிகர் நாசர் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'கட்சிக்கு என்று ஒரு கொள்கை வேண்டும். ஆனால், இப்போது வெறும் பிரபலமாக இருப்பதால் மட்டுமே, ஒருவர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். எந்த கொள்கையில் நீங்கள் அரசை நடத்த போகிறீர்கள் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
'இப்போதுள்ள தி.மு.க., அரசு, ஒரு கொள்கையோடு செயல்படுகிறது. நான் கட்சி சாராதவன்; அனைவருக்கும் பொதுவானவன். நமக்கு தேவை, கல்வி, பொருளாதாரம், சுயமரியாதை. இவை அனைத்தும் ஒருங்கே இருக்கும் இடம் தி.மு.க., மட்டுமே. கடலில் பல அலைகள் வரும், போகும். ஆனால், ஒரு பாறை, பல அலைகளையும் தாங்கி நிலைத்து நிற்கும்; அதுபோல நம் முதல்வர் உள்ளார்' என்றார்.
இதைக்கேட்ட நிருபர் ஒருவர், 'நான் கட்சி சாராதவன் என சொல்லிவிட்டு, தி.மு.க.,காரர் போலவே பேசுறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

