PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

கோவை, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆண்டு விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை தி.மு.க., - எம்.பி.,யுமான ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'இப்பள்ளியில் நான் பயின்ற போது, நிறைய குறும்புகள் செய்திருக்கிறேன். டீச்சர் கிளாசுக்கு வரும் போது, எல்லாரும் சேர்ந்து கூச்சலிடுவோம். சில நேரங்களில், வகுப்பறை யில் இருந்த பொருட்களை உடைத்திருக்கிறோம். அவர்களில் சிலரும் இங்கு வந்துள்ளனர்' என்று குறிப்பிட்டு பேசினார்.
அவரது பேச்சை கேட்டு, மேடையில் இருந்தவர்களும், முன் வரிசையில் உட்காந்திருந்த அவரது நண்பர்களும் முகம் சுளித்தனர்.
ஆசிரியர் ஒருவர், 'மாணவர்களுக்கு ஒழுக்கமா நாலு அறிவுரை சொல்வார்னு பார்த்தால், 'டீச்சரை கலாய்ப்போம்; பெஞ்சை உடைப்போம்'னு மாணவர்களை உசுப்பேத்துற மாதிரி பேசுறாரே...' என முணுமுணுக்க, சக ஆசிரியையர் ஆமோதித்து, தலையில் அடித்தபடி நகர்ந்தனர்.

