PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் தி.மு.க.,விற்கு பிரதான போட்டியாளர் பா.ஜ., கூட்டணி தான். இந்த முறை காங்கிரஸ் பல மாநிலங்களில் பூஜ்யமாகும். தி.மு.க., கூட்டணிக்கு மாற்று பா.ஜ., என்பது இந்த தேர்தலில் ஓட்டு சதவீதத்தில் நிரூபிக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும். அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு செல்லும். இந்த இரண்டு கட்சிக்கும் மாற்று கட்சி பா.ஜ., தான்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் பா.ஜ., வளர்வது, தி.மு.க.,வுக்கு பிரதான போட்டியாளரா மாறியிருப்பது எல்லாம் இருக்கட்டும்... கட்சியில் இவரோட வளர்ச்சி நாளுக்கு நாள் தேய்ஞ்சுட்டே வருதே ஏன்...?' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அதை அவரிடமே கேட்கலாமே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

