PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டனுடன் இணைந்து, தி.மு.க., கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், மகுடீஸ்வரன், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற வி.சி., கட்சியை சேர்ந்த கவுன்சிலர் வீரமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் பேசும்போது, 'வால்பாறை நகராட்சியில், தலைவர் மற்றும் கமிஷனர் ஆகியோர் கூட்டணி அமைத்து, பில் போட்டு கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கிறாங்க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்' என, ஆவேசமாக பேசினர்.
தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'இவ்வளவு நாளா எங்கிருந்தாங்க? இப்ப, கமிஷன் வாங்கறதுல, ஏதோ பிரச்னை இருக்கும் போல... அதனால தான் வரிந்து கட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க' என, சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்து, 'நச்' கமென்ட் அடித்தார்.

