PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறுகையில், 'சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கூட்டத்தில், '829 கோடி ரூபாய் கூவத்திற்காக செலவு செய்துள்ளோம்' என, கூறியிருந்தார். அதன் அடிப்படையில், செலவு செய்த தொகை எவ்வளவு; எதற்காக செலவு செய்தீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டு, சென்னை மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.
'பதில் வரும் என எதிர்பார்க்கிறேன். பதில் வந்த பின், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இருக்கும். என் கருத்திற்கு எந்த விதமான எதிர்வினையும் வராது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அவங்களிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராது... இவங்க கட்சியில் இளங்கோவன் போன்றோர் தான் எதிர்வினை ஆற்றுவாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

