PUBLISHED ON : செப் 11, 2024 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டையில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்றார்.
சின்னம்மாபேட்டை கிளை நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'திருவாலங்காடு மின் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமத்தில் எங்கள் பகுதி தான் அதிக மின் கட்டணம் செலுத்துகிறது. எங்களுக்கு துணை மின் நிலையம் அமைக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ராஜேந்திரன் பேசுகையில், 'பாப்பரம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. மற்ற இடங்களில் ஆறு மாதங்களில் அமைக்கப்படும். பூண்டி ஒன்றியத்தில் நான் மட்டும் மாதம், 15 லட்சம்ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறேன். இந்த மாதத்தில் இருந்து, 18 லட்சம் ரூபாய் செலுத்த உள்ளேன்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'அரசின் மின் கட்டணஉயர்வை தான் எம்.எல்.ஏ., மறைமுகமா சொல்றாரோ...?' என, முணுமுணுத்தபடி நடந்தார்.

