PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

புதுக்கோட்டையில் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த பிரீமியர் - 2024 கிரிக்கெட் போட்டியை, திருச்சி தொகுதி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டதும், இலங்கை போர் காலத்தில் முள்ளிவாய்க்காலில் 1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததும் வரலாற்று பிழை.
'உலகத்தின் பல நாடுகளில் இதுபோன்று கருத்து வேறுபாடு வரும் போது, சிறுசிறு தனி நாடுகளாக பிரிப்பது வழக்கம். இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிப்பதற்கு உலக நாடுகளும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஒருவேளை மத்தியில் இவங்க கட்சி தலைமையில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், தனி ஈழம் அமைக்கலாமே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதிப்பது போல தலையாட்டினர்.

