/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'இவங்களுக்கு, 'சல்யூட்' அடிக்கலாம்!'
/
'இவங்களுக்கு, 'சல்யூட்' அடிக்கலாம்!'
PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சியினர் தேர்தல் மோதல் தொடர்பாக, ஒருவர் மீது ஒருவர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அவ்வாறு வந்தவர்களை இன்ஸ்பெக்டர் இந்திராணி பேசியே சமாதானம் செய்து அனுப்பினார்.
புகார் அளிக்கும் இரு தரப்பினரையும் ஒரே நேரத்தில் அழைத்து, 'தேர்தல் முடிந்த பின், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டும். நல்லது கெட்டதுக்கு ஒரே ஊர்க்காரர்கள் தான் வருவர். இதில் கட்சி எங்கிருந்து வருகிறது...' என, அறிவுரை வழங்கி அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவரின் செயல்பாட்டை பார்த்த கட்சி நிர்வாகிகள் சிலர், 'பிரச்னைனா வழக்கு போடுறது மட்டும் போலீஸ் பணியல்ல... பிரச்னையே வராமல் தடுக்கறதும் அவங்க பணி தான்... அந்த வேலையை கன கச்சிதமா செய்யுற இவுங்களுக்கு, 'சல்யூட்' அடிக்கலாம்...' என, பாராட்டி மகிழ்ந்தனர்.

