/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'அலேக்கா துாக்கிட்டு வந்துட்டீங்க!'
/
'அலேக்கா துாக்கிட்டு வந்துட்டீங்க!'
PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM

சென்னை, கொளத்துாரில், தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'நான் இங்கு பட்டியலிட்ட பெயர்களை எழுதி வைத்து தான் படித்தேன். ஆனால், அமைச்சர் சேகர்பாபு விரல் நுனியில் அனைவரின் பெயரையும் வைத்துக் கொண்டு பேசினார். நான் அவரை பார்த்து பயந்து விட்டேன்.
'உண்மையில் நான் இங்கு அழைத்து வரப்படவில்லை; இழுத்து வரப்பட்டேன். மேடைக்கு வருவதற்குள் என் கை என்னிடம் இருக்குமா என, தெரியவில்லை அந்தளவு மக்கள் கைகுலுக்கி வரவேற்றனர்' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அதற்காக தானே சேகர்பாபு, செந்தில் பாலாஜின்னு அ.தி.மு.க., வின் செயல்வீரர்களை அலேக்கா தி.மு.க., பக்கம் துாக்கிட்டு வந்துட்டீங்க...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

