PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

நவம்பர் 19, 1994
திருச்சியில், பெரியண்ணன் - சுப்புலட்சுமி தம்பதியின் மகனாக,1899 நவம்பர் 10ல் பிறந்தவர் விஸ்வநாதம். இவரது பெரியப்பாக்களான கிருஷ்ணன், ஆறுமுகத்துடன் இணைந்து, இவரதுதந்தை பெரியண்ணனும் புகையிலை வியாபாரம் செய்தார்.
அவர்களின் முதல் எழுத்துக்களான, கி.ஆ.பெ.,யை வியாபாரத்துக்கு பயன்படுத்தியதால்,இவரும், தன் பெயருக்கு முன் கி.ஆ.பெ.,யை சேர்த்தார். பள்ளிக்கே செல்லாத இவர், முத்துசாமி கோனார், வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள்,திரு.வி.க., சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோரிடம்தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று, நுால்களை எழுதினார்.
ஈ.வெ.ரா.,வுடன் நீதிக் கட்சியில் இணைந்த இவர், 'தமிழகம் தமிழருக்கே' என முழங்கியதுடன்,ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றார். 'திராவிடர் கழகம்' என்ற இயக்கத்தைஈ.வெ.ரா., துவக்கியதால், அவரிடமிருந்து பிரிந்தார்.
தமிழுக்காக, 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளைநிகழ்த்தியுள்ளார். தன் மகளின் திருமணத்தில் கூட பங்கேற்காமல் சிறை சென்ற இவர், 1994ல் தன் 95வது வயதில், இதே நாளில் மறைந்தார். அரசு, இவரது பெயரில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்குகிறது.
'முத்தமிழ் காவலரின்' நினைவு தினம் இன்று!

