PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

நவம்பர் 29, 1913
கோவை மாவட்டம், சிங்காநல்லுாரில், வெங்கட்ராமன் - பார்வதிதம்பதியின் மகனாக, 1913ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம்.
சிறு வயதிலேயே தாயை இழந்து, ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினார். நடிப்பு ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி, தந்தையின் சம்மத கடிதத்தை தானே எழுதி, மதுரை பாலசண்மு கானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, அதில் சேர்ந்தார்.
'சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்' நாடகக் குழுவை துவக்கி, அதில் சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தியதுடன், பின்னணி பாடும் கலையையும்அறிமுகப்படுத்தினார். திரையுலகில், மேனகா படத்தில் அறிமுகமானார். பராசக்தி, ஆனந்தஜோதி,மர்மயோகி, உரிமைக்குரல், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்திய - சீன போரின்போது, போர் நிதிக்காக பலநாடகங்களை நடத்தியதுடன், தனக்கு கிடைத்த தங்கம், வெள்ளி பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் காமராஜரிடம் வழங்கியஇவர் 1988, பிப்., 19ல் தன் 75வது வயதில் மறைந்தார்.
எஸ்.வி.எஸ்., பிறந்த தினம் இன்று!

