PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

நவம்பர் 21, 1970
திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில், சந்திரசேகர் அய்யர் - பார்வதிதம்பதிக்கு மகனாக, 1888, நவம்பர் 7ல் பிறந்தவர் வெங்கட்ராமன்.
இவரது தந்தை, விசாகப்பட்டினத்தில்இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றியதால், இவரும் அங்கேயேபள்ளி படிப்பை முடித்தார். இயற்பியல், கணிதத்தில்திறமையான இவர், சென்னை மாநிலக் கல்லுாரியில் பி.ஏ., - எம்.ஏ., பட்டங்களை பெற்றார்.
கோல்கட்டா கணித துறை தலைமைஅலுவலகத்தில், கணக்காளராக பணியாற்றினார். அங்குள்ள அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் பேராசிரியராகி, ஒளிச்சிதறல் பற்றி 15 ஆண்டுகள் ஆய்வுசெய்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை தந்தார்; அவை, 'ராமன் விளைவு' என அங்கீகரிக்கப்பட்டது.
அறிவியல் சாதனைகளுக்காக லண்டன் ராயல் சொசைட்டியின், 'நைட் ஹீட், சர்' பட்டங்களை பெற்றார்; 1930ல், இயற்பியலுக்கான நோபல் பரிசு, இவருக்கு வழங்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக இயக்குனராக பணியாற்றினார். பெங்களூரில், 'ராமன் ஆய்வு நிலையம்' அமைத்த இவர், 1970ல் தன் 82வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
சர்.சி.வி.ராமனின் நினைவு தினம் இன்று!

