PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

நவம்பர் 2, 1999
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் எனும் ஊரில் குப்பு - அலமேலு தம்பதியின் மகனாக, 1934, பிப்ரவரி 4ல் பிறந்தவர் கு.ச.ஆனந்தன்.
பள்ளி படிப்பை முடித்து, கோவை அரசு கல்லுாரியில் வணிகவியல், சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டம் படித்தார். கோவை மற்றும் கோபியில்உரிமையியல் மற்றும் குற்றவியல் துறை வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்திய ஆட்சி மொழி சிக்கல்கள், தமிழகத்தின் உரிமைகள், தேசிய இன சிக்கல்கள் குறித்து நிறைய நுால்களை எழுதினார். 'வழிபாட்டில் வல்லாண்மை, ஹிந்தி சிக்கலும் இறுதி தீர்வும்' உள்ளிட்ட நுால்களை எழுதினார்.
தமிழக அரசின், 'திருவள்ளுவர் விருது' மற்றும்குன்றக்குடி அடிகளாரின், 'குறள் ஞாயிறு'உள்ளிட்ட விருதுகளை பெற்றார். இவரது,'இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும்' உள்ளிட்ட சில நுால்களுக்கு, தமிழக அரசின் சிறந்த நுால் பரிசு கிடைத்தது. 1999ல் தன் 65வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

