PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

செப்டம்பர் 29, 1926
தஞ்சாவூர் மாவட்டம், திருமெய்ஞானம் கிராமத்தில் பக்கிரிசுவாமி பிள்ளை -- மீனாட்சி தம்பதியின் மகனாக, 1926ல் இதே நாளில் பிறந்தவர் நடராஜ சுந்தரம் பிள்ளை.
இவர், தன் சித்தப்பா நாராயணசுவாமி பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். தருமபுரம் அபிராமி சுந்தரம்பிள்ளையிடம் துணை நாதஸ்வர கலைஞராக வாசித்தார். பல்லவி வாசிப்பதில் புதிய உத்திகளை கையாண்ட இவர், திருவாரூர் வைத்தியநாத பிள்ளையுடன் இணைந்து, கோவில்களில் சுவாமி புறப்பாட்டின் போது வாசித்து, பக்தர்களை உருக வைத்தார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்த பல்லவி விற்பன்னர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் கச்சேரி நடத்தினார்; திருவாவடுதுறை, குன்றக்குடி ஆதீன வித்வானாகவும் இருந்தார். நாத நர்த்தகி படத்திற்கு வாசித்த இவர், கொலம்பியா இசைத்தட்டு நிறுவனத்துக்காக, 'ஸரஸ ஸாமதான, முருகன் என்றதுமே' உள்ளிட்ட பாடல்களுக்கு வாசித்தார்.
'நாதசுதா, நாதஸ்வர கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1981, நவம்பர் 4ல் தன் 55வது வயதில் மறைந்தார்.
'ஏழிசை முகில்' பிறந்த தினம் இன்று!

