PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

செப்டம்பர் 18, 1928
கர்நாடக மாநிலம், பட்கலில், ஹரிகதா கலைஞரும், ஓவியருமானரங்காராவ் -- காவேரி பாய் தம்பதியின் மகளாக, 1928ல் இதே நாளில் பிறந்தவர் பண்டரிபாய். தன்தந்தையை போல், 10வது வயதில்ஹரிகதா செய்தார்; புராண நாடகங்களில் நடித்தார்.
வாணி என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில், ஹரிதாஸ் படத்தில் அறிமுகமானார். பராசக்தி படத்தில், 'ஓ ரசிக்கும் சீமானே...' பாடலில் நடனமாடி புகழ் பெற்றார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்தார். தெய்வமகன், அடிமைப்பெண்,நம் நாடு, எங்க வீட்டு பிள்ளை, வசந்த மாளிகை உள்ளிட்ட படங்களில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., மட்டுமின்றி, ஜெமினி கணேசன்,ஜெய்சங்கர், முத்துராமன், கமல், ரஜினி உள்ளிட்டோருக்கும் அம்மாவாக நடித்துமுத்திரை பதித்தார்.
ரஜினியின், மன்னன் படத்தில், 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' என்றபாடலுக்கு நடித்து, ரசிகர்களின் அம்மாவாகவும்திகழ்ந்தார். விபத்தில் ஒரு கையை இழந்ததால்,நடிப்பில் இருந்து விலகிய இவர், 2003, ஜனவரி 29ல் தன், 74வது வயதில் மறைந்தார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த, 'அம்மா' நடிகை பிறந்த தினம் இன்று!

