PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி,கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'வாழ்ந்தவர் கோடி; மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்?' என்ற கேள்விக்கு, சிலரை உதாரணம் காட்டலாம்.
அவர்களில் ஒருவராக விளங்குகிறார் காலஞ்சென்ற தொழிலதிபர் ரத்தன் டாடா. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தபோது, அனைவரும் தம்மால் இயன்ற வரை, அவரது புகைப்படத்திற்கு மாலை யிட்டு வணங்கினர்; இன்றும் அவரது நினைவு நாளில், மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ரத்தன் டாடாவை பற்றியும்அனைவரும் சிலாகித்து வருகின்றனர்.
தன் பல வகையான தொழிற்சாலைகள் வாயிலாக தரமான பொருட்களை வழங்கி, 'நம்பர் ஒன்' பெயர் பெற்ற ரத்தன் டாடா, பல நாடுகளில் டாடா நிறுவனங்களை நிறுவி, அங்கேயும் நம் கொடியை உயர பறக்கவிட்டார்.
தான் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை, தானமாக வழங்கினார். அவர் மறைந்தாலும், இன்று அவருடையநிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்லாயிரம் பேர், டாடா நிறுவனத்தில் பணிபுரிவதை மிகப்பெரிய கவுரவமாகக் கூறி பெருமை அடைகின்றனர்.
அப்படிப்பட்ட டாடா, தன் மறைவுக்குப்பின், தன் சொத்துக்களை எப்படி எல்லாம்நிர்வகிக்க வேண்டும் என்று, நம் அனைவருக்கும் பாடம் புகட்டி சென்றுள்ளார்.
தன் பங்களாவில் நீண்ட நாட்களாக பணிபுரிந்த பணியாளர்களுக்கும், தன் செல்லப் பிராணியான, 'டிடோ' நாயை பராமரிக்கவும், தன் பிரத்யேக சமையலர்ராஜன் ஷாவுக்கும் தன் சொத்தில் ஒரு பகுதியை சேர்த்து எழுதிக் கொடுத்துஉள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.
தன்னை கவனித்துக் கொண்ட பணியாளர்கள் முதல், சமையலர் வரை அனைவரின் மீதும் அன்பும், மரியாதையும்வைத்திருந்தார் என்பதை, இதன் வாயிலாக அறிய முடிகிறது. டாடாவின் எளிமை குணம், தேசப்பற்று, ஈகை குணம், ஒழுக்கம் என்பது, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டியது அவசியம்.
தடைக்கு தடை போடுங்கள்!
க.சிவகுமார்,
கோவையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: 'பட்டாசு பயன்பாட்டில்
கவனம்' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர்இதே பகுதியில் கடிதம்
எழுதியிருந்தார்.
'பட்டாசுகளின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது; ஏழை
எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது;மலைபோல் குவியும் குப்பையால்
சுற்றுச்சூழல்கேடு, துாய்மைப் பணியாளர்களுக்கு பணிச்சுமை, தீ விபத்துகள்,
உயிரிழப்புகள், காயங்கள்ஏற்படும்' என்றெல்லாம்எழுதியிருந்தார்; உண்மை தான்!
ஹிந்துக்களின்
பண்டிகைகளில் மிக முக்கியமானது, அவசியமானது இந்த தீபாவளி. ஏழைகளின்
எட்டாக்கனியான போதிலும்,எந்த ஏழையும் தீபாவளியைபுறக்கணிப்பதில்லை;
அவர்களால் முடிந்த பட்ஜெட்டிற்கு துணிமணிகள்,பட்டாசுகள், பலகார பண்டங்கள்
வாங்கி மகிழ்ந்துகொண்டாடுகின்றனர்.
என்னிடம் கூட,தீபாவளிக்கு என்
குடும்பத்தாருக்கு துணிகள், பட்டாசுகள் வாங்க பணம்இல்லை தான்.
அதற்காக,நாங்கள் தீபாவளி கொண்டாடாமல் இருக்கப்போவதில்லை.
அதிகாலை
எண்ணெய்வாசனையும், சாம்பிராணி,ஊதுபத்தி வாசனையும், இனிப்பு பலகாரங்களின்
வாசனையும், புதுத் துணியின்வாசனையும் என, அனைத்தும் மகிழ்ச்சி தான்.
வேலைக்கு
செல்பவர்களுக்கு, 'இந்த ஆண்டு எவ்வளவு போனஸ் கிடைக்கும்...' என்ற
எதிர்பார்ப்பில்மகிழ்ச்சி அடங்கியுள்ளது;இல்லத்தரசிகளுக்கு, 'என்ன
பண்டங்கள் செய்யலாம்; எந்த கடையில் துணி எடுக்கலாம்; குழந்தைகளுக்கு என்ன
டிசைனில் எடுக்கலாம்...' என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
இளைஞர் - இளைஞியருக்கு, 'என்ன பிராண்ட் மொபைல் போன் அல்லதுஆபரணங்கள் வாங்கலாம்...'என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சிஅடங்கியுள்ளது.
பெரிய
வியாபாரிகள் முதல் ஊதுபத்தி விற்பவர்கள் வரை, 'இந்த ஆண்டு எவ்வளவு விற்பனை
சதவீதம் இருக்கும்...' என்றஎதிர்பார்ப்பில் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
இத்தனை
மக்களும் எதிர்பார்த்து கொண்டாடஉள்ள தீபாவளியை, விதிகள்,நிபந்தனைகள்,
கட்டுப்பாடுகள் போட்டு கட்டுப்படுத்தலாமா? சொல்லப் போனால், பட்டாசு
வெடிக்க, 2017ல் முதன்முறையாக கட்டுப்பாடு விழுந்ததே... அப்போது எழுந்த மன
நெருக்கடி சொல்லி மாளாது!
ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?
பழனி மலையில் காவடிஎடுத்துச் செல்ல தடை, கோவிலுக்குள் கந்த சஷ்டி கவசமும், கந்த குரு கவசமும் பாட தடை.
சில
நாட்களுக்கு முன், திருப்பரங்குன்றத்தில் தேவாரம், திருவாசகம் பாடுபவர்,
அறநிலையத்துறை பெண் அதிகாரியால்தடை செய்யப்பட்டு
வெளியேற்றப்பட்டுள்ளார்.என்ன நடக்கிறது இங்கே?
மதம் சார்ந்த
பண்டிகைகள் அவரவர்களுக்கு முக்கியம். ஆனால்,ஹிந்து பண்டிகை என்றாலே,
திடீரென நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் என, பல்வேறு
போர்வைகளில் பதுங்கியபடி, பலர் குரல் எழுப்புகின்றனர்.
பெரும்பான்மை
ஹிந்துக்களையும், அவர்கள் மதம் சார்ந்த பண்டிகைகளையும்,கொஞ்சம் கொஞ்சமாக
நாகரிகம், காற்று மாசு, விரயச் செலவு என்று மூளைச்சலவை செய்து அழித்து
வருகின்றனர். தீய சக்தியை எதிர்க்க, அனைத்து ஹிந்துக்களும் ஒன்று சேர்வது
காலத்தின் கட்டாயமாகி விட்டது.
வெறுங் கையால் முழம் போடாதீர் சீமான்!
என்.வைகை
வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'எங்கள் கட்சிக்கு
இப்போது, 8 சதவீதம் மக்கள் ஆதரவு இருக்கிறது. இது, 32 சதவீதமாக உயரும்போது,
மற்ற கட்சிகள் எங்களுடன் தேர்தல் கூட்டணி வைக்க முன்வரும்' என, தன்
பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார், சீமான்.
நாம் தமிழர்
கட்சியைத் துவங்கி பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, சீமானால்இதுவரை 8 சதவீதம்
மக்கள் ஆதரவைத் தான் பெற முடிந்தது. இவரால் தன் கட்சிக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட தேர்தல் சின்னத்தையும் காப்பாற்ற முடியவில்லை.
இதுவரை
நடைபெற்ற எந்த தேர்தலிலும் இவரதுகட்சி வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
அப்படிஇருக்கும்போது, சீமான் தங்கள் ஓட்டுசதவீதத்தை, 32 ஆகஉயர்த்திக்
காட்டுவோம் என்று சொல்வது நம்பும்படியாக இல்லையே...
முதலில்,
குறைந்தபட்சம் கவுன்சிலர் தேர்தலில் இவரது கட்சி ஜெயித்துக் காட்டட்டும்.
வாயால் வடை சுடாமல், தேர்தலில் வெற்றி பெற்று தன் ஓட்டு சதவீதத்தை,
8லிருந்து அட்லீஸ்ட், 16 சதவீதமாக சீமான் உயர்த்தி காட்டட்டும்.
அதன்பிறகு மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி சீமான் முன் வரட்டும்.
வெறுங்கையால் முழம் போட நினைப்பதால்எந்தப் பயனும்சீமானுக்குக் கிடைக்கப் போவதில்லை.

