PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: நெல்லை மாவட்டம்,
வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இரண்டு
புதிய திரைப்படங்களை திரையிட்டு, வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கி
இருப்பது கண்டனத்துக்குரியது. கல்வி கற்கும் இடத்தில், திரைப்படம்
காண்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
'முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி
சினிமா பார்த்துட்டு, படக்குழுவை பாராட்டுறாரே... பள்ளியிலும் படம் போட்டா
நமக்கும் பாராட்டு கிடைக்கும்'னு வாத்தியார்கள் நினைச்சிருப்பாங்களோ?
முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலருமான டாக்டர் சரவணன் அறிக்கை: 'அரசு மருத்துவமனைகளில்மருந்து தட்டுப்பாடு உள்ளது'என, பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் சுப்ரமணியன், 'அதுபோன்று இல்லை' என, முழு பூசணிக்காயை சோற்றில்மறைத்தார். 'கத்தரிக்காய் முத்தினால் கடைவீதிக்கு வரும்'என்பதை போல், தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு எக்ஸ்--ரே எடுத்தவருக்கு பிலிம் இல்லாமல், பேப்பரில் நகல் எடுத்துக் கொடுத்துள்ளனர்.
அந்த பேப்பராவது புதுசா, இல்ல பாதி விலைக்கு பழைய பேப்பர் கடையில் இருந்து வாங்கிட்டு வந்த, 'ஒன் சைடு' பேப்பரான்னு பாருங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை: மதவாதத்தைவிட ஆபத்தானது ஜாதியவாதம்.மதங்களின் பெயரால் அரசியல் செய்வதை, எவ்வாறு ஏற்க முடியாதோ, அதேபோல் ஜாதியின் பெயரால் அரசியல் செய்வதையும் ஏற்க முடியாது. பெரும்பான்மையாக வசிக்கும் சமுதாயத்தின் அடிப்படையில், அந்த தொகுதிகளின் சட்டசபை, லோக்சபா வேட்பாளரை அறிவிப்பதன் வாயிலாக, சிறுபான்மை சமுதாயம் நசுங்கிப் போவதை கண்கூடாகபார்த்து வருகிறோம்.
அப்படின்னா, ஜாதியை மையமா வச்சு இயங்கும் அரசியல்கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: சித்தாந்தவேறுபாடு கொண்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியோடும்,கம்யூனிஸ்டுகளோடும் கரம் கோர்த்து, வீழ்த்தவே முடியாதகட்சி என்றிருந்த காங்கிரசை,வீட்டிற்கு அனுப்பியவர்அண்ணாதுரை. இந்த மதிநுட்ப வரலாறை, இன்று சொந்தக் கட்சியையே சிதைத்து,வன்மத்தை முன்னெடுக்கும் பழனிசாமி கேட்டு தெரிந்து தெளிவுபெற வேண்டும்.
பழனிசாமிக்கு இருக்கிற மாதிரி, அண்ணாதுரைக்கு சொந்த கட்சியிலயே எதிரிகள் ரவுண்டு கட்டினாங்களா என்ன?