/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
காலம் கடந்தாலும் பயனுள்ள உத்தரவு!
/
காலம் கடந்தாலும் பயனுள்ள உத்தரவு!
PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர்களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்' என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான் ஒரு முன்னாள் படைவீரன். இந்தியாவிலேயே ஜாதி குறிப்பிடப்படாத ஒரே துறை, இந்திய ராணுவம் மட்டும் தான். அன்று ராணுவத்தில் சேரும்போதே, மதத்தை மட்டும் குறிப்பிடுவது நடைமுறை.
ஏனெனில், அன்னிய நாட்டுடன் ஏற்படும் யுத்தத்தில் ஒருவேளை இறந்து விட்டால், அவரவர் மத வழக்கத்தின்படி அங்கேயே உடல் நல்லடக்கம் செய்யப்படும்; இதுதான் அன்றைய நடைமுறை. ஆனால், வீரரின் சீருடை மட்டும் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், தற்போதைய நடைமுறையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இறந்த உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்புவதும் அல்லாமல், ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் ஒரு வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வெளியே வந்ததும், மறுவேலைவாய்ப்பிற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால், ஜாதி குறுக்கிடுகிறது.
உதாரணத்திற்கு, 1986ல் ராணுவத்தில் பணி நிறைவு பெற்று நான் வெளியே வந்ததும், சிறைத்துறை வார்டன் பதவிக்காக ஒரு நேர்முகத் தேர்விற்கு சென்ற போது உயரம் குறைவு என நிராகரிக்கப்பட்டு மிக வேதனை அடைந்தேன். அப்பதவி, என்னை விட உயரம் குறைவான, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இதுபோன்ற நடைமுறையும் மாற்றப்பட வேண்டும். தற்போது, மனுவில் ஜாதி, மதம் குறிப்பிடக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காலம் கடந்த உத்தரவாக இருந்தாலும், வருங்காலங்களில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
''இண்டியா' ஆட்சிக்கு வந்தால் 8வது அதிசயம்!
த.யாபேத்
தாசன், பேய்க் குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டது. அனைத்து கட்சிகளுமே தேர்தல் வேலைகளில்
தீவிரமாக இறங்கி உள்ளன.'இண்டியா' என்ற பெயரில் உருவாகியுள்ள
எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் களத்தில் குதித்துள்ளது.
பா.ஜ.,வை
அதிலும், குறிப்பாக மோடியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இந்த
கூட்டணியிலுள்ள அனைத்து தலைவர்களின் ஒரே நோக்கம். இந்த ஒரே நோக்கத்திற்காக
மட்டுமே, ஒற்றுமையாக இருப்பது போல் வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால்,
நாடு முழுதும் பல நகரங்களில் கூடி ஆலோசித்தும், கூட்டணியில் ஒருமித்த
கருத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.
இந்த
கூட்டணியில் உள்ள தலைவர்களில், நம் தமிழக முதல்வரை தவிர வேறு யாருமே,
காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. கடந்த 2019ல், 'ராகுல் தான்
பிரதமர் வேட்பாளர்' என்று அறிவித்த ஸ்டாலின்கூட இப்போது, 'யார் ஆள வேண்டும்
என்பதுமுக்கியமல்ல யார் ஆளக்கூடாது என்பது தான் முக்கியம்' என்று அடக்கி
வாசிக்கிறார்.
எனவே, காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை, மாநிலங்களில் மிகவும் செல்வாக்குள்ள கட்சிகள் விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை.
மறுபக்கம்
காங்கிரசும், ஒரு தேசிய கட்சி போல் செயல்படவில்லை. அதனால் தான், நேரடியாக
பா.ஜ.,வுடன் மோத வேண்டிய இடங்களில், அக்கட்சியை மக்கள் நிராகரிக்கின்றனர்.
மேலும்,
காங்கிரஸ் ஆட்சியில், தீர்க்காமலே குளிர் காய்ந்து கொண்டிருந்த பல
பிரச்னைகள் இன்று மிகவும் அமைதியாகவும், சட்டபூர்வமாகவும் பா.ஜ.,
தலைமையிலான மத்திய அரசால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி
திட்டங்களிலும், இந்த அரசு சிறப்பாகவே செயல்படுகிறது.
காங்கிரஸ்
தலைமையும், ராகுலும் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக செய்து விட்டு, மோடியை
குறை கூறுவதிலேயே காலத்தை தள்ளுகின்றனர். எனவே, எட்டாவது அதிசயம் ஏதாவது
நிகழ்ந்தால் ஒழிய, 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதில்லை.
லோக்சபா தேர்தலிலேயே களம் இறங்கலாமே!
அ.குணா,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: தமிழக அரசியலில் மட்டும்
அல்ல... இந்திய அரசியலில் கூட முதன் முறையாக, ஒரு நடிகர் தன் ரசிகர்களை தன்
கட்சியின் தொண்டர்களாக மாற்றி, இமாலய வெற்றி பெற்றவர்மறைந்த முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. அவரால் அடையாளம் காட்டப்பட்ட, அவரது
அரசியல் வாரிசான ஜெயலலிதாவும் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில்
மிகப்பெரியகோலிவுட் நட்சத்திரங்கள் கட்சி ஆரம்பித்தாலும், அவர்களால் வெற்றி
பெற முடியவில்லை. சரத்குமார் மட்டுமே பேருக்கு ஒரு கட்சி நடத்தி
வருகிறார். அந்த வரிசையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் மட்டுமே
தே.மு.தி.க.,வை 2005ல் துவங்கி, 2011ல் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.
பின்,
அவரது தவறான முடிவுகள் மற்றும் உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவரது
கட்சி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப்
பின், தானும் அரசியலுக்கு வந்து எம்.ஜி.ஆரை போன்று ஆட்சி செய்யப் போவதாக
கூறினார் ரஜினி.
அதே சமயம் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்து, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக செயல்படப் போவதாக கூறினார்.
அதன்பின்,
ரஜினி பல்டி அடிக்க, கமலோ தற்போது தி.மு.க., தனக்கு ஒரு சீட் கொடுத்தால்
போதும் என்று ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கிறார்.
சீமான் மட்டுமே தற்போது வரை தனித்து களம் கண்டு வந்தாலும், சிறிய வெற்றியை கூட அவரால் பெற முடியவில்லை.
இந்த
சூழலில், நடிகர் விஜய்யும் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய
கட்சியை துவங்கி, அரசியல் களத்தில் குதித்துள்ளார் அதே நேரம், 'லோக்சபா
தேர்தலில் போட்டியிட போவது இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை' என்றும்
அதிரடியாக அறிவித்து உள்ளார்.
உண்மையில், தமிழக மக்களுக்கு ஏதாவது
நல்லது செய்ய வேண்டும் என்று விஜய் நினைத்தால், துணிச்சலாக வரும் லோக்சபா
தேர்தலிலேயே களம் இறங்க வேண்டும். அவரது கட்சியில் உள்ள படித்த, நேர்மையான
இளைஞர்களை வேட்பாளர்களாக்கி, 'பல்ஸ்' பார்க்க வேண்டும்.
இந்த தேர்தல், அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க விஜய்க்கும், அவரது கட்சியின ருக்கும் நல்லதொரு அனுபவமாகவும் இருக்கும்!

