sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

உண்மையை தெரிந்து கொள்வோம்!

/

உண்மையை தெரிந்து கொள்வோம்!

உண்மையை தெரிந்து கொள்வோம்!

உண்மையை தெரிந்து கொள்வோம்!

1


PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கு.காந்திராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம், ஜி.எஸ்.டி.,க்குட்பட்ட ஒரு பொருளை வாங்கும் போது, 'பில்'லை பாருங்கள்... ஒரு ரூபாய் என்று இருந்தால், அதில் மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி., 50 காசு; மாநிலத்துக்கான எஸ்.ஜி.எஸ்.டி., 50 காசு.

அதோடு, மத்திய அரசுக்குரிய 50 காசில், 29 காசை, மாநிலங்களுக்கே மத்திய அரசு திருப்பித் தருகிறது. அப்படியெனில், மொத்தம், 79 காசு கிடைக்கிறது தானே!

மத்திய அரசுக்கு கிடைக்கும், 21 காசிலும் பெரும்பகுதி, இலவச வீடு, வீடுதோறும் குழாய்கள் மூலம் குடிநீர், ரயில்வே திட்டங்கள், மெட்ரோ, மருத்துவ காப்பீடு, இலவச காஸ் சிலிண்டர், ஸ்மார்ட் சிட்டி, விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6,௦௦௦ ரூபாய் இலவசம் போன்ற, பல்வேறு திட்டங்கள் வாயிலாக, மாநில அரசுக்கே திரும்பக் கிடைக்கிறது.

உண்மை இப்படி இருக்க, ஸ்டாலினும், உதயநிதியும், ஒரு ரூபாய் கணக்கில், 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது என்று, பொய் மூட்டையை அவிழ்த்து விட்டபடி இருக்கின்றனர்; மக்களை ஏமாற்றுகின்றனர்.

இன்னொரு உண்மையும் தெரிந்து கொள்வோம்...

தமிழக அரசுக்கு நாம் செலுத்தும் பல்வேறு வரிகள், கட்டணங்களில், 1 ரூபாயில், 50 காசு, தமிழக அரசு கஜானாவுக்கு செல்கிறது;

மீதி இருக்கும் 50 காசு, லஞ்ச ஊழல்களாக தி.மு.க.,வினரின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது.

மகனும், மருமகனும், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டனர் என ஒரு அமைச்சர் சொல்லப் போக, அவரை இலாகா மாற்றி அழகு பார்த்தது நம் அரசு.

இதையெல்லாம், பிரதமர் மோடி, புட்டு புட்டு வைப்பதால், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டுகின்றனர் நம்மவர்கள். உண்மையை நாம் தெரிந்து கொள்வோம்!



'இந்த' வாய் 'அந்த' வாயாக மீண்டும் மாறுமோ?


எஸ். பழனிவேல், திருவா ரூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் வந்து விட்டால், ஈ.வெ.ரா.,வெல்லாம் காற்றில் காணாமல் போய் விடுவார்; 'என் மனைவி ராமர் பக்தை; கடவுள் மீது எனக்கு கோபம் இல்லை' என்றெல்லாம் கதை அளந்து விடத் தெரியும் சிலருக்கு; அதையும் கேட்டு நாம், புளகாங்கிதம் அடைவோம்.

ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடந்த போது, இதே வாய், என்னவெல்லாம் பேசியது... 'நீங்கள் ஒன்றைக் காட்டி, இது கடவுள், இது ராமர் என்பீர்கள். பாரத் மாதா கி ஜெய் என்பீர்கள். ஆனால், நாங்கள் ஒருபோதும் ராமரை ஏற்க மாட்டோம்; பாரத மாதாவையும் ஏற்க மாட்டோம். ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்' என்றதே!

இதைத் தவிர, நம் நாட்டை வேறு மாதிரியும் இதே வாய் பேசியது; அதை இங்கே சொல்ல வேண்டாம்; சப்ஜெக்ட் மாறிவிடும்!

அதே வாய் இப்போதைய தேர்தல் நேரத்தில், பம்முவதற்கு என்ன காரணம்? கட்சித் தலைமை, 'டின்' கட்டிவிடும் என்ற பயமா? 'இப்போது இப்படி வேஷம் போட்டா, மக்கள் ஓட்டு போட்டுடுவாங்க...' என்ற எகத்தாளமா?

தேர்தல் முடிந்த பிறகு, இந்த வாய், மீண்டும், 'அந்த' வாயாக மாறிவிடுமோ?

மேற்கு வங்கத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்வரை, திருடர்கள் யாராவது, பொதுமக்கள் கையில் அகப்பட்டு விட்டால், நடுரோட்டில் மின் கம்பத்தில் கட்டி, போவோர் வருவோர் எல்லாம் அடி, உதை என நிமிர்த்தி விடுவர். அந்த ஆள், 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என ஓடி விடுவான்; பின் திருட்டுத் தொழில் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான்.

மீண்டும் அதே தொழிலுக்கு வந்தால், அவன் உயிர் உடலில் இருக்காது. போலீசாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இது தான் நடைமுறையாக இருந்தது.

அந்தக் காட்சி இப்போது, தேவையில்லாமல் கண்ணுக்கு வந்து செல்கிறது, என்ன செய்ய...!



தி.மு.க.,வினரிடம் எதிர்பார்ப்பது பேராசை!


பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'அரசியலில் நேர்மை என்றால் பெருந்தலைவர் காமராஜர் முகம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் உருவாக்கிய மதிய உணவுத்திட்டம், மக்களு க்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதில் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது' என, சேலம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

நேர்மையை பற்றி பேசினால், தி.மு.க.,வினருக்கு பிடிக்காது என்பதாலோ என்னவோ, வெகுண்டெழுந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 'சேலம் மாநாட்டில் பிரதமர் மோடி, காமராஜரை புகழ்ந்து பேசினார். அவருக்கும், இவருக்கும் என்ன சம்பந்தம்?' எனக் கேள்வி எழுப்பினார்.

அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை... கெட்ட வார்த்தையால் பிரதமரை திட்டவும் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், 'அனிதா ராதாகிருஷ்ணனை அமைச் சராக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவை குறித்து வெட்கப்பட வேண்டும். அவரை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்' என, உணர்ச்சி பொங்க கருத்து தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் ஏன் வெட்கப்பட வேண்டும்? ஒரு அமைச்சர், கெட்டவார்த்தை பேசினார் என்பதற்காக, முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்.

ஏனென்றால், கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கு, கூட்டம் சேர்ப்பதற்காக, கொஞ்சமும் மேடை நாகரிகம் இல்லாமல், தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் போன்ற ஆபாச பேச்சாளர்களை, மேடையில் பேச வைத்து அழகு பார்த்த ஒரே கட்சி, உலகத்திலேயே தி.மு.க.,வை தவிர வேறில்லை.

எனவே, பிரதமரை கெட்ட வார்த்தையால் திட்டியதற்காக, 'கழகத்தின் போர்வாள், பிரசார பீரங்கி, தீப்பொறி அனிதா ராதகிருஷ்ணன்' என்றெல்லாம் பட்டம் கொடுத்து, அமைச்சரை கவுரவிக்க வேண்டும் என்று யாராவது கோரிக்கை விடுத்தால், அது உடனடியாக நிறைவேறும்.

அதை விடுத்து, ஒரே ஒரு கெட்ட வார்த்தை பேசியதற்காக, அமைச்சரை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்க வேண்டும், முதல்வர் வெட்கப்பட வேண்டும் என்றெல்லாம் தி.மு.க.,வினரிடம், எதிர்பார்ப்பது பேராசை!








      Dinamalar
      Follow us