sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க!

/

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க!

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க!

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க!

1


PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.தனபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில்,திராவிட முன்னேற்ற கழகம் என்ற தி.மு.க., துவங்கியதே, 1949, செப்., 17ல் தான். ஆனால், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இன்று வீற்றிருக்கும்அன்பில் மகேஷ், புதிய கல்விக்கொள்கை குறித்து ஒரு, 'உருட்டு' உருட்டி இருக்கிறார் பாருங்கள்... கேட்டால், அதிர்ந்து மூர்ச்சையாகி விடுவீர்கள்.

அதனால், கழகம் தமிழகத்தில் பிறந்த தேதியை துவக்கத்திலேயே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

'முதல்வர் ஸ்டாலின், தன் அரசியல் லாபத்திற்காக, தமிழக மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை புறக்கணிக்கிறார் என்பது தான் உண்மை. தரமான கல்வி திட்டம் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து விட்டால், கழகத்தின் திராவிட மாடல் எனும் மாயை உடைந்து சிதறி விடும்என்ற பயத்தில், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் முதல்வர், தமிழக மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை இருப்பது போல் கபட நாடகம் ஆடுவதை நிறுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., அறிக்கை ஒன்றின் வாயிலாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

அந்த அறிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது, அமைச்சர் மகேஷின்பதில். அதாவது, '1930ல் துவங்கி, 1960கள் வரை பல போராட்டங்கள் வாயிலாக தமிழின் உரிமையை பாதுகாத்துள்ளோம்' என, ஒரு பயங்கர உருட்டு உருட்டி இருக்கிறார்.

நாம் பள்ளி இறுதி வகுப்பை 1967 - -68 கல்வி ஆண்டில் முடித்து, பள்ளியை விட்டு வெளியே வந்தோம். அதுவரை தமிழகத்தில் கல்வி சம்பந்தமாக எந்த ஒரு போராட்டமும் நடந்ததில்லை.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதும்,1965 கால கட்டத்தில் தான் கழகத்தால், துவங்கி நடத்தி வைக்கப்பட்டது. அந்த போராட்டத்தின் துவக்கத்தில், கழக பேச்சாளர்களின் ஆவேச பேச்சுகளால் கவரப்பட்ட கல்விக்கு கிஞ்சிற்றும்சம்பந்தம் இல்லாத விவசாயிகளும், தொழிலாளிகளும் தான் கலந்து கொண்டு, தங்களுக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டு மாண்டனர். அதன்பின், கல்லுாரி மாணவர்களையும் துாண்டிவிட்டு கலந்து கொள்ளச் செய்தது தான் கழகத்தின் சாதனை.

ஆனால், 1930களில் துவங்கி, 1960கள் வரை பல போராட்டங்கள் வாயிலாக தமிழின் உரிமையை பாதுகாத்துள்ளதாக பயங்கரமாக ஒரு உருட்டை உருட்டி இருக்கிறார் மகேஷ். -1949ல் துவங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி, 1930களில் எப்படி, எங்கு போராட்டங்கள் நடத்தி இருக்க முடியும்?

பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?



பச்சே ாந்திகளை நம்பி கோட்டை விடாதீர்கள்!


வி.ெஹச்.கே.ஹரிஹரன்,திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கட்சி தாவுதல், வட மாநிலங்களில் சகஜம்.கடந்த, 1977, 1980களில் இது தொடங்கியது. அடுத்து ஆட்சிக்கு யார் வருவார் என்பதை, அரசியல் பச்சோந்திகள் துல்லியமாக கணிப்பர். நீண்ட கால கட்சிக்காரர்கள்,அரசியல் ஆரூடர்களுக்குகூட இந்த ரகசியம் தெரியாது.

'மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி அரசு மீது, அதிருப்தி சலிப்பு அதிகரிக்கலாம்; தெற்கு வடக்காகவும், மேற்கு கிழக்காகவும் பாத யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரதமர் ஆகலாம்' என்று, பல பிரபலங்கள் நம்புகின்றனர்.

கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, பஞ்சாப் முதல்வர்கனவில் காங்கிரசில்இணைந்தார். காங்.,மாநில தலைவராக, 2021, 2022 ஆண்டுகளில் இருந்தார்; ஆட்சியில்இருந்த காங்கிரசைசீர்குலைத்துவிட்டு கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

ராம் பஜன் பாடகர் கான்ஹா மிட்டல், ஹரியானா,பஞ்சகுலா சட்டசபை தொகுதி வேட்பாளர் ஆக ஆசைப்பட்டு, பா.ஜ.,வில் இருந்து காங்கிரசுக்கு தாவ உள்ளார்.

பிரபல குத்துச்சண்டை வீரர்கள் விக்னேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும், காங்கிரசில் இணைந்து ஹரியானா சட்டசபை தேர்தல் வேட்பாளர் ஆக உள்ளனர்.

அசாம் மாநில திரிணமுல்காங்., தலைவர் ரிப்போன்போரா, மீண்டும்காங்கிரசுக்கு திரும்பிஉள்ளார்.

விளையாட்டு வீரர்கள்,நடிகர் - நடிகையர் என எல்லாரும், பதவி, அங்கீகாரம், அதிகாரம்,செல்வாக்கு ஆகியவற்றைஎதிர்பார்த்து தான், அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ள கட்சியில் இணைகின்றனர்.

ஒரு காலத்தில், லலிதா, பத்மினி, ராகினி, கே.பி.சுந்தராம்பாள், சகஸ்ரநாமம், சிவாஜி கணேசன் போன்றோர், பிரதிபலன் எதிர்பாராமல், காங்கிரசை ஆதரித்தனர். நடிகை குஷ்பு, காங்கிரசில் சேர்ந்தார்; அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஆனார்.

திடீரென தி.மு.க., வுக்கு மாறினார்; அங்கிருந்து பா.ஜ.,வில் சேர்ந்து அமைதியாகி விட்டார்.

கவர்ச்சி நடிகை, சிறந்த பேச்சாளர் என்ற புகழ் இருப்பவர் யாரும், ஆளுமைமிக்க நிர்வாகிஆக முடியாது.எவ்வளவோ வலிகளையும், பிரச்னைகளையும் தாங்கி, கட்சியிலேயே நீண்டகால விசுவாசிகளாக உள்ளவர்களுக்கு, உரிய அங்கீகாரம், அந்தஸ்து, பதவி கிடைத்தால் தான், கட்சியை கைவிடாமல் இருப்பர்.

உ.பி., - பா.ஜ.,வில் மூன்றில் இரண்டு பங்கு வேட்பாளர்கள், 'கட்சி மாறிய கேட்டகரி'யில் இருந்ததால் தான், லோக்சபாவில், அக்கட்சி மண்ணைக் கவ்வியது.

இதை அனைத்து கட்சியினரும் நினைவில் கொள்ள வேண்டும்!



மன உளைச்சல் ஏற்படுத்தும் தொடக்கக் கல்வித்துறை!


கிருஷ்ணன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான் பள்ளி மேம்பாட்டு கட்டமைப்பு குழுவில் உள்ளேன். சில நாட்களுக்கு முன் எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவரை பார்த்தேன். அவர் முகத்தில் கவலை மற்றும் ஏதோ மனக்குழப்பத்தில்இருப்பது போன்று தோன்றியது. இதை, பள்ளி மேம்பாட்டு குழு தலைவரிடம் கேட்டேன். அவர் கூறியது மிகவும் வருந்தத்தக்கது.

என்னவென்றால், ஆசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வுமுடிந்து விட்டது; ஆனால், எந்த பிரச்னையும்இல்லாத, மனமொத்த மாறுதல் மட்டும், தேதி அறிவிக்கப்பட்டும், நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

மனமொத்த மாறுதல்,இரண்டு மணித் துளிகளில்முடிவடையக் கூடியகலந்தாய்வு தான்; ஆனால் ஏன் இழுபறி? இந்த விவகாரத்தால், ஆசிரியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

சில ஆண்டுகளாகவே இந்த மாறுதல் மட்டும் நடத்தாமல் தவிர்க்கப்பட்டு வருகிறது. பூனைக்கு மணி கட்டுவது யார்?








      Dinamalar
      Follow us