/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஊழல்வாதிகளுக்கு ஓட்டு கிடைக்காது!
/
ஊழல்வாதிகளுக்கு ஓட்டு கிடைக்காது!
PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப் போராட்டம் நடத்துகிறார். அமலாக்கத் துறை மூலம், தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் என, பல தலைவர்களைச் சிறையில் அடைத்ததன் விளைவாக, பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை, மக்கள் மத்தியில் உருவாகி விட்டது' என்று, 'அளந்து' விட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அரவிந்த் கெஜ்ரிவால், செந்தில் பாலாஜி, ஹேமந்த் சோரன் எல்லாம், உத்தம சிகாமணிகள் அல்ல. ஊழல் செய்து, கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கும் இவர்களை, சட்டப்படி கைது செய்து, சிறையில் அடைத்திருக்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்து, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
அரவிந்த் கெஜ்ரிவால் அப்பாவி என்று கருதி, நீதிமன்றம் அவரை ஜாமினில் வெளியே விடவில்லை.
'முதல்வராக பணியாற்றக் கூடாது; தலைமைச் செயலகத்துக்குச் செல்லக் கூடாது; மதுபான கொள்கை வழக்கு சம்பந்தமாகப் பேசக் கூடாது; கெடு விதிக்கப்பட்ட நாட்களுக்கு மேல் வெளியே தங்காமல் சிறைக்கு வந்து விட வேண்டும்' என்று, ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்துத் தான், ஜாமின் வழங்கிஉள்ளது.
ஜாமினில் வெளியே வந்ததை, கெஜ்ரிவால் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று, எப்படி பாராட்ட முடியும்?
கடந்த பத்தாண்டு பா.ஜ., ஆட்சியையும், தி.மு.க.,வின் மூன்று ஆண்டு ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து, லோக்சபா தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு ஆதரவு தரக் கூடாது என்பதில், மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
ஊழல்வாதிகளிடம் இந்த நாட்டை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை என்பதை, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மதச்சார்பின்மை ஸ்டிக்கர் படுத்தும் பாடு!
எஸ்.ராமசுப்பிரமணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு
முன், சினிமா டைரக்டர் அமீர், அவரது மகள் நீட் தேர்வு எழுதச் சென்றதாகவும்,
தேர்வு மையத்தில், அவர் மகள் முகத்தை மூடியிருந்த ஹிஜாபை கழற்ற
சொன்னதாகவும், ஹிஜாபை கழற்றி விட்டுத்தான் தேர்வு எழுத வேண்டுமென்றால்,
அப்படி பட்ட தேர்வு எழுத தேவையில்லை என்று சொல்லி, திரும்பி வந்து
விட்டதாகவும் ஒரு கதை விட்டிருந்தார்.
ஏற்கனவே, தேர்வெழுதுவோருக்கு உள்ள சட்ட திட்டம், இவருக்குத் தெரியாமல் இருப்பது யார் குற்றமோ தெரியவில்லை.
தெலுங்கானாவின்
ஹைதராபாதில், ஓட்டளிக்க வந்த முஸ்லீம் பெண் வாக்காளர்களிடம், ஹிஜாபை
அகற்றச் சொல்லி அடையாள அட்டையுடன் முகத்தை ஒப்பிட்டு பார்த்த,
அத்தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் மாதவி லதா மீது, நான்கு பிரிவுகளில்
வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர்களின் விபரங்களை
சரிபார்க்க அதிகாரிகள் இருக்கும் போது, மாதவி லதாவுக்கு யார் அதிகாரம்
அளித்தது என, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பழமைவாதத்தில்
ஊறிப் போயுள்ள, பல அரேபிய நாடுகளிலேயே, இந்த ஹிஜாப் விவகாரம், வாபஸ்
பெறப்பட்டு கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில், அழகி போட்டியில் கூட ஒரு
முஸ்லிம் பெண் பங்கேற்றதாக செய்திகள் வந்திருந்தன.
பிரான்ஸ் நாட்டில், ஹிஜாப் அணியக் கூடாது.
சுவிட்சர்லாந்து நாட்டில் கூட, புர்கா போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஆனால், இந்தியாவில் இந்த மதச்சார்பின்மை ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு செய்யப்படும் அலப்பறைகள், எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன.
பாஸ்போர்ட்,
பள்ளிக்கூட சான்றிதழ், வாக்காளர்அடையாள அட்டை, மோட்டார் வாகன உரிமம்
போன்றவற்றை முஸ்லிம் பெண்கள் வாங்கும் போது எப்படி வாங்குவர்? ஹிஜாபை
கழற்றினால் தானே புகைப்படம் எடுக்க முடியும்?
முஸ்லிம் பெண்கள் விரும்புகின்றனரோ, இல்லையோ... ஹிஜாப் விவகாரம் பாடாய்படுத்துகிறது!
புரிகிறதா பழனிசாமிக்கு?
ந.தேவதாஸ்,
சென்னையில் இருந்து எழுதுகிறார்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்
சர்ச்சில், ஒரு சமயம், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக சென்றிருந்தார்.
அந்த கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
மக்கள்
கூட்டத்தை பார்த்த அவர் நண்பர் ஒருவர், சர்ச்சிலிடம், 'உங்கள் பேச்சை
கேட்பதற்காக, எவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது பாருங்கள்... மக்கள் உங்கள்
மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு புரிகிறதா?'
என்றார்.
உடனடியாக சர்ச்சில், 'நண்பரே, மக்கள் கூட்டத்தைப்
பார்த்து அப்படி ஏமாந்து விடக்கூடாது. என்னை துாக்கில் போடுவதாக
அறிவித்திருந்தால், இதை விட மூன்று மடங்கு கூட்டம் வந்திருக்கும்'
என்றாராம் சிரித்துக் கொண்டே!
'கூட்டத்தை பார்த்து என்றுமே, தப்புக் கணக்கு போட்டு விடாதே' என்பதை, மிகத் தெளிவாக சர்ச்சில் எடுத்துக் காட்டினார்.
தமிழக
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சில நாட்களுக்கு முன்,'தினமலர் நாளிதழ்
உள்ளிட்ட சில ஊடகங்கள் மக்களிடையே அ.தி.மு.க., விற்கு செல்வாக்கு குறைந்து
விட்டது என, தவறான கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன.
'அவர்கள்
இங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்க்க வேண்டும். எங்களுக்கு மக்களிடையே
எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திடல் முழுதும்
மக்கள் திரண்டு உள்ளனர்.மக்கள் ஆசியுடன் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியில்
அமரும்' என்று கூறியிருந்தார்.
புரிகிறதா பழனிசாமிக்கு?
என்ன செய்ய போகிறோம்?
ஆர்.ஜெகதீசன்,கோவில்பட்டியிலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன், 'தற்போது,
சட்டங்களின் படி தெரு நாய்களை கருத்தடை செய்து மட்டுமே கட்டுப்படுத்த
முடியும்' என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் அதை ஏன் செய்யவில்லை?
தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் அலைகின்றனவே? அதனால் சாமானிய மக்கள்
எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்பது தெரியும் தானே?
தினசரி
நாய் கடித்து எத்தனையோ பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைக்கு
வருகின்றனர். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இதற்காக ஒதுக்கப்படும் பணம்
என்னாகிறது? தெரு நாய்களை கட்டுப்படுத்த, என்ன செய்யப் போகிறோம்?

