/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கோபி மாணவன் உருவாக்கிய 'செயற்கைக்கோள்' சோதனை
/
கோபி மாணவன் உருவாக்கிய 'செயற்கைக்கோள்' சோதனை
ADDED : பிப் 28, 2024 05:39 AM

கோபி : ஈரோடு மாவட்டம், கோபி, திரு.வி.க., வீதியை சேர்ந்த வேலுமணி மகன் ரித்தீஷ், 15, கோபி வைரவிழா நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர். இவர், 60 கிராம் எடை கொண்ட, மினி செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார்.
நேற்று, பள்ளி வளாகத்தில் இந்த செயற்கைக்கோள், ஹீலியம் பலுான் வாயிலாக விண்ணில் ஏவப்பட்டது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஹீலியம் பலுான் உதவியுடன், 250 மீட்டர் துாரம் பறக்கவிட்டு, வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்தது. இந்த முயற்சியை ஓராண்டாக செய்தோம். இனி, அடுத்தகட்ட முயற்சிக்கு செல்ல எங்களுக்கு பொருளுதவி தேவைப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
மாணவன் ரித்தீஷ் கூறுகையில், ''ஐந்து வகையான விபரங்களை அறியும் வகையில், இந்த மினி செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனையில் வெப்பநிலை, உயரம், அழுத்தம், ஈரப்பதம், காற்றின் தன்மை பதிவாகியுள்ளன.
பேரிடர் காலங்களில், தகவல் தொடர்புக்கு இந்த மினி செயற்கைக்கோளை பயன்படுத்த முடியும்,'' என்றார்.

