/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
இலங்கை - தனுஷ்கோடி நீந்தி மாற்றுத்திறனாளி வாலிபர் சாதனை
/
இலங்கை - தனுஷ்கோடி நீந்தி மாற்றுத்திறனாளி வாலிபர் சாதனை
இலங்கை - தனுஷ்கோடி நீந்தி மாற்றுத்திறனாளி வாலிபர் சாதனை
இலங்கை - தனுஷ்கோடி நீந்தி மாற்றுத்திறனாளி வாலிபர் சாதனை
ADDED : ஏப் 14, 2025 03:39 AM

ராமேஸ்வரம் : இலங்கை தலைமன்னாரிலிருந்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி, மாற்றுத்திறனாளி வாலிபர் தியான் சாதனை படைத்தார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தியான்,19; மணீஷ், 49; சந்தோஷ், 46; மூவரும் பெங்களூருவில் தனியார் நீச்சல் அகடாமியில் பயிற்சி பெற்றனர்.
இவர்கள் பாக்ஜலசந்தி கடலில், இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடக்க முடிவு செய்தனர்.
மூவரும் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, இலங்கை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். இதில், மாற்றுத்திறனாளி தியான் தொடர்ந்து நீந்தினார். மற்ற இருவரும் அரை கிலோ மீட்டர் துாரத்துக்கு ஒருவர் என, ஓய்வெடுத்து மாற்றி, மாற்றி நீந்தி கடக்கும் ரீலே முறையில் நீந்தினர்.
இவர்கள் 29 கி.மீ., துாரத்தை நீந்தி, நேற்று மதியம், 3:30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர். இவர்களை இந்திய - இலங்கை நீச்சல் குழு ஒருங்கிணைப்பாளர் ரோஜர், மரைன் போலீசார் பாராட்டினர்.

