/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
செயின் பறித்த திருடனை 10 கி.மீ., துரத்தி பிடித்த மக்கள்
/
செயின் பறித்த திருடனை 10 கி.மீ., துரத்தி பிடித்த மக்கள்
செயின் பறித்த திருடனை 10 கி.மீ., துரத்தி பிடித்த மக்கள்
செயின் பறித்த திருடனை 10 கி.மீ., துரத்தி பிடித்த மக்கள்
ADDED : நவ 04, 2024 11:05 PM

வையம்பட்டி; திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியைச் சேர்ந்தவர் லில்லிராணி, 64; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர், நேற்று காலை, வீட்டு வாசலில் நின்றிருந்த போது, 'ஹெல்மெட்' அணிந்து, 'பல்சர்' பைக்கில் வந்த நபர் முகவரி கேட்பது போல நடித்து, லில்லிராணி அணிந்திந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பினார்.
லில்லி ராணி கூச்சலிடவே, வீட்டில் இருந்த அவரது மகன், அந்த தெருவில் வசிப்பவர்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் திருடனை துரத்தினர். வையம்பட்டியில் இருந்து மணப்பாறை ரோட்டில் வேகமாக வந்த திருடனை, பின் தொடர்ந்து துரத்தி வந்தவர்கள், 10 கி.மீ., துாரம் உள்ள கரட்டாம்பட்டி என்ற இடத்தில், காரால் பைக்கை இடித்து, திருடனை கீழே விழ வைத்தனர்.
திருடன் காயங்களுடன், அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்ப முயன்றார். ஆனாலும், விடாது துரத்தி பிடித்த மக்கள், பின், தர்ம அடி கொடுத்து, வையம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த குமார், 37, என, தெரிந்தது. தங்க சங்கிலி மீட்கப்பட்டது.

