தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ நுார்ஜஹான் வகை மாம்பழம்; ஒரு பழம் ரூ.3,800க்கு விற்பனை

 நுார்ஜஹான் வகை மாம்பழம்; ஒரு பழம் ரூ.3,800க்கு விற்பனை

 நுார்ஜஹான் வகை மாம்பழம்; ஒரு பழம் ரூ.3,800க்கு விற்பனை

1


ADDED : ஜூன் 17, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 03:53 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலிராஜ்பூர்: மாம்பழங்களின் ராணி என்றழைக்கப்படும், 'நுார்ஜஹான்' வகையைச் சேர்ந்த, 3.3 கிலோ எடை உடைய ஒரு மாம்பழம், மத்திய பிரதேசத்தில் 3,800 ரூபாய்க்கு விற்பனையானது.

மத்திய பிரதேசத்தின் கத்திவாடா பகுதி நுார்ஜஹான் வகை மாம்பழங்கள் பயிரிடுவதற்கு புகழ்பெற்றது. மாம்பழங்களின் ராணி என்றழைக்கப்படும் இந்த அரிய வகை பழம், ஆப்கானிஸ்தானில் இருந்து பல நுாற்றாண்டுகளுக்கு முன் குஜராத் வழியாக இந்தியாவுக்கு வந்ததாக நம்பப்படுகிறது.

முகலாய மன்னர் ஜஹாங்கீரின் மனைவி நுார்ஜஹான் பெயர் இந்த வகைக்கு வைக்கப்பட்டது. ஒரு மாம்பழம் மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை இருக்கும். இதன் பிரத்யேக இனிப்பு சுவை மற்றும் அரிய வகைத்தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

தற்போது மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டம், கத்திவாடா பகுதியில் சில மரங்கள் மட்டுமே உள்ளன. அவை இயற்கை முறையில் பராமரிக்கப்படுகின்றன.

அப்பகுதியைச் சேர்ந்த மாம்பழ விவசாயி பரத்ராஜ் சிங் ஜாதவ், தன் தோட்டத்தில் விளைந்த 3.30 கிலோ எடையுள்ள நுார்ஜஹான் மாம்பழம், கிலோ 1,151 ரூபாய் என்ற அடிப்படையில், 3,800 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை விளைந்த மிகப்பெரிய மாம்பழம் இது. மாதத்தின் இறுதியில் 4 கிலோ வரை எடையுள்ள மாம்பழங்கள் வரக்கூடும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us