/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தின்பண்ட பாக்கெட்டில் எண்ணெயில் பொறித்த எலி
/
தின்பண்ட பாக்கெட்டில் எண்ணெயில் பொறித்த எலி
ADDED : செப் 19, 2025 07:22 AM

நாட்றம்பள்ளி; குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த சிப்ஸ் பாக்கெட்டில் எலி கிடந்ததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி செல்லப்பாண்டி. இவர், தன் குழந்தைகளுக்கு வீட்டின் எதிரில் உள்ள டீ கடையில், 'ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி' என்ற பெயரில், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட, நான்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்தார்.
வீட்டிற்கு வந்து, அதில் ஒரு பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, முழு எலி ஒன்று எண்ணெயில் பொறிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.