/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்
/
பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்
பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்
பறவைகளுக்கும் தாகம் எடுக்கும்ல! பாத்திரத்துடன் இதோ நீள்கின்றன உதவும் கரங்கள்
UPDATED : மார் 13, 2024 11:10 AM
ADDED : மார் 13, 2024 01:25 AM

கோவை;பறவைகள், விலங்கினங்களின் தாகம் தணிக்கவும், சூட்டை குறைக்கவும், கோவை நகர் முழுவதும், 600 இடங்களில் தண்ணீர் குவளை வைக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. பறவைகள், விலங்கினங்கள் தாகம் தணிக்க தண்ணீர் இல்லாமலும், வெப்பத்தை தாங்க முடியாமலும் அவதிப்படுகின்றன. இதுபோன்ற தருணங்களில், பிராணிகள் நலச்சங்கத்தினர், தண்ணீர் குவளைகள் வைப்பது வழக்கம்.
ஒவ்வொருவரும் தங்களது வீடுகளின் மொட்டை மாடியில், பறவைகளுக்காக தண்ணீர் குவளை வைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு கால்நடைத்துறை, பிராணிகள் நலச்சங்கம் மற்றும் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப், இண்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டரி கிளப்புகள் மற்றும் 'யங் இண்டியன்ஸ்' அமைப்பு இணைந்து, கோவை நகர் முழுவதும் தண்ணீர் குவளை வைக்கும் திட்டத்தை துவக்கியுள்ளன. இவ்விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பிராணிகள் நலச்சங்கத்தின் தலைவரான, கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, துணை இயக்குனர் திருக்குமரன் முன்னிலை வகித்தனர்.
பிராணிகள் நலச்சங்க துணை தலைவர் அபர்ணா சங்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஷோபனா, மனோஜ் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்தாண்டு, 400 இடங்களில் தண்ணீர் குவளை வைக்கப்பட்டது. நடப்பாண்டு கூடுதலாக, 200 இடங்கள் சேர்த்து, 600 குவளை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப்புகள் சார்பில் குவளை தரப்படுகிறது; குவளைகளை சுத்தம் செய்து, தினமும் தண்ணீர் நிரப்பும் பணியை, தன்னார்வலர்கள் செய்ய உள்ளனர்.

