/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வாசகர்களை தேடிப்போய் படிக்க புத்தகம் தருகிறது இந்த நுாலகம்!
/
வாசகர்களை தேடிப்போய் படிக்க புத்தகம் தருகிறது இந்த நுாலகம்!
வாசகர்களை தேடிப்போய் படிக்க புத்தகம் தருகிறது இந்த நுாலகம்!
வாசகர்களை தேடிப்போய் படிக்க புத்தகம் தருகிறது இந்த நுாலகம்!
UPDATED : ஏப் 21, 2024 12:45 PM
ADDED : ஏப் 21, 2024 12:50 AM

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி செய்பவர்கள், வாக்கிங் முடித்த பின் இனி ரிலாக்ஸாக அமர்ந்து புத்தகம் படிக்கலாம்.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், 'உங்களைத்தேடி நுாலகம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மினி நுாலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ள நுாலக வேன், வாசகர்களை தேடி சென்று அவர்கள் இருக்கும் இடத்தில், படிக்க நுால்களை தருகிறது.
மக்கள் பொழுது போக்க, கூடும் இடங்களில் இந்த நுாலக வேன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் வ.உ.சி.பூங்கா, ரேஸ்கோர்ஸ் நடைப் பயிற்சி பகுதி, வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய குளம் பகுதிகளில், இந்த வேன்கள் மாலை நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பொழுது போக்க வரும் இளைஞர்கள், முதியவர்கள் நுாலக வேனில் இருந்து புத்தகங்களை எடுத்து அங்குள்ள பெஞ்சுகளில் அமர்ந்து படித்து விட்டு, திரும்ப கொடுத்து விடுகின்றனர். இந்த வேனில் 1,800 நுால்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நுாலக வேன், ரேஸ்கோர்ஸ் காஸ்மாபாலிட்டன் கிளப் அருகில், வாரத்தில் நான்கு நாட்கள் மாலை 5:00 இரவு 8:00 மணி வரை நிறுத்தப்படுகிறது.
அஸ்வின் என்ற வாசகர் கூறுகையில், ''நான் ரெகுலரா 'வாக்கிங்' வர்றேன். ரெண்டு ரவுண்ட் முடிச்சதும் இங்க வந்து உட்கார்ந்து ரிலாக்ஸ் செய்வேன். அப்ப மொபைல் லைப்ரரி இங்க நிக்கறதை பார்த்தேன். இப்ப டெய்லி, ஒன் அவர் இங்க உட்கார்ந்து புக் படிச்சிட்டுதான் வீட்டுக்கு போறேன். உண்மையில் இது வெரிகுட் சிஸ்டம்,'' என்றார்.

