/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ஜப்பான் நாட்டு துாதராக நியமனம்
/
விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ஜப்பான் நாட்டு துாதராக நியமனம்
விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ஜப்பான் நாட்டு துாதராக நியமனம்
விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ஜப்பான் நாட்டு துாதராக நியமனம்
UPDATED : மே 18, 2024 03:31 PM
ADDED : மே 18, 2024 06:22 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜப்பான் நாட்டிற்கான இந்திய துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் அப்பர் - புனிதா தம்பதியின் மகன் சந்துரு, 42; இவரை ஜப்பான் நாட்டிற்கான இந்திய துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய நாட்டின் துாதரக அலுவலகத்தில் பணியாற்றினார்.
அப்போது மத்திய அரசு சார்பில், இலங்கை வாழ் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிய திட்டத்தில் பெரும் பங்காற்றினார். பின், ஆஸ்திரேலியா துாதரக அலுவலகத்தில் பணியாற்றி 2020ல் இந்தியா திரும்பினார்.
டில்லியில் வெளியுறவு துறை அமைச்சரக அலுவலகத்தில் தனிச் செயலராக பதவி வகித்து வந்த இவரை, ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாண துாதரக அலுவலக கவுன்சில் ஜெனரலாக (துாதுவர்) மத்திய அரசு நியமித்துள்ளது.

