தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

5


PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம், வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது; தற்போது, 13ம் தேதிக்கு அக்கூட்டம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: எல்லாரும் கூட்டத்தை தள்ளிவைக்கிறதா தான் அறிவிப்பு வெளியிடுவாங்க... தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல்ல, உங்க கட்சிக்கு எந்த பங்களிப்பும் இல்லையே... அப்படியிருந்தும், முன்கூட்டியே கூட்டத்தை நடத்த வேண்டிய அவசரம் ஏன் என்ற, 'டவுட்' எழுதே!

lll

ராஜ்யசபா காங்., - எம்.பி., கிறிஸ்டோபர் திலக்: தமிழகத்தில் பா.ஜ., நுழைந்து விடக்கூடாது என, த.வெ.க.,வுக்கு காங்., ஆதரவு கொடுத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 39 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர். இதில், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளும் உள்ளன என்பதை மறந்து பேசுகின்றனர். காங்., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய சொல்பவர்கள், அந்த எம்.பி.,க்களையும் ராஜினாமா செய்ய சொல்வரா? உதயநிதி கூட, காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஓட்டுகள் மூலம்தான் வெற்றி பெற்றார். அவர் ராஜினாமா செய்வாரா?

டவுட் தனபாலு: நியாயமான கேள்வி தான்... உதயநிதி ரோஷப்பட்டு ராஜினாமா பண்ணிட்டாலும், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்... ஏற்கனவே அடிச்ச விசில் அலையில, உதயநிதியின் தந்தை ஸ்டாலினே தோத்து போயிட்டாரு... அதனால, உதயநிதி அந்த, 'ரிஸ்க்'கை எடுப்பாரா என்பது, 'டவுட்'தான்!

lll

காங்., - எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார்: தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, பல்வேறு கூட்டணி அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். எனினும், மதவாத சக்திகளுக்கு எதிராக, 'இண்டி' கூட்டணியில் உறுதியாக இருந்தோம். ஜனநாயக நாட்டில், மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளை தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் ஜனநாயக முடிவுகளுக்கு தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி, த.வெ.க.,வுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தேர்தலுக்கு முன்னாடியே த.வெ.க.,வுடன் நீங்க கூட்டணி அமைத்திருந்தால், 150 இடங்களுக்கு மேல ஜெயிச்சிருப்பீங்க... ஆனா, தி.மு.க.,வின் கிளை கழக நிர்வாகிகளாகவே செயல்பட்ட சில காங்., தலைவர்களால, உங்க கனவு பலிக்காம போயிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us